திருமால் பின்னர் அவ்விடத்தினின் றகன்றுபோய் விளங்காநின்ற திருத்தணிகைமலையை வலம்வந்து அம்மலையினெதிரே கிடந்து தன்கட்படிவோர் துன்பமனைத்தும் தீர்த்தருளாநின்ற குமாரதீர்த்தத்தில் படிந்து இனி யாற்றுதற்குரிய கடமைகளை ஆராய்ந்து வெண்ணீறு கண்ணித்த பரந்த தன் மார்பிலணிந்த கண்மணிமாலைகள் பக்கத்தே அசைந்தாடத் திருத்தணிகை மலைமிசை ஏறினன். (வி - ம்.) குறி - சிவலிங்கம். காவிவரை - தணிகைமலை; அரந்தை - துன்பம். வெண்ணீற்றொளிபரந்த எனலுமாம். (6) | அத்தி யுங்கொடியு நின்றவ ரைப்பி | | னைந்து மெட்டுமுற வாரவ ணங்கிப் | | பத்தி சேர்மணிவண்மாளிகை சூழ்ந்து | | பைய வாலயநு ழைந்து விழைந்த | | கொத்த னைத்தையும்வ ழங்குமொ ரைங்கைக் | | குஞ்ச ரத்தொடு குமாரலிங் கேசன் | | உத்த மச்சரண நச்சிவ ணங்கி | | யொளிறு வேற்கையிறை வன்புடை யுற்றான். |
(இ - ள்.) (எம்பெருமானோடு) தேவயானையும் வள்ளியம்மையாரும் எழுந்தருளிய அத்திருத்தணிகையின்கண் ஐந்துறுப்பும் எட்டுறுப்பும் நிலத்திலே பொருந்த வீழ்ந்து வணங்கி நிரல்பட்ட மணி மாடத்தை வலம்வந்து மெல்லத் திருக்கோயிலினுட் புகுந்து தன்னை வழிபட்டோர் விரும்பிய வரத்தின் தொகுதியை எஞ்சாமல் வழங்குகின்ற ஐந்து கைகளும் யானைமுகமுமுடைய ஆவச்சகாயப் பெருமானையும் குமாரலிங்கக் கடவுளையும் சிறந்த திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி விரும்பி ஒளிவீசாநின்ற வேற்படையேந்திய பெருமான் பக்கலிலே சென்றனன். (வி - ம்.) அத்தி - யானை; தெய்வயானை. கொடி, வள்ளி, அத்தி மரமும் கொடியும் என்னும் பொருளுந் தோன்றுதலுணர்க. எட்டு - எட்டுறுப்பு. ஐந்து - ஐந்துறுப்பு. நச்சி - விரும்பி. (7) | அருவி கொண்டுவிழி நீருடன் மண்ண | | வஞ்ச லிக்கரமு டித்தலை யேற | | உருகி யுள்ளம்வள ரன்புதி ளைப்ப | | வுயர்ம றைத்துதிக ணாவின டிப்பக் | | கருணை பொங்கிவழி யுங்கடை நோக்குங் | | கமலம் வென்றமுக மும்விழி கூசத் | | தருண சுந்தரமி குந்தொளி வீசுஞ் | | சாமி நாதனுரு முற்றும டுத்தான். |
(இ - ள்.) விழிநீர் அருவிபோன்று வழிந்து தனதுடலைக் குளிப்பாட்டக் குவித்த கைகள் தலைமிசையேற, உள்ளம் உருகி மிகாநின்ற |