நின்ற மந்திரங் கணித்தலைப் பெரிதுஞ்செய்து பக்கத்தே சென்று மேற்றிசையில் அணித்தாயதோரிடத்தே விளங்காநின்ற சுனையின்கண் பண்புற நாட்கடன் முடித்து அவ்விடத்திலேயே வலிய ஐம்பொறிகளையும் கெடுத்துப் பெரிய தவத்தினை ஆற்றா நின்றனன். (வி - ம்.) மாலையும் யாமமும் என்க. வேலை - பொழுது. நீறு - திருநீறு. சால - மிக. அணித்தலை - அணித்தாய இடம். ஏல - இயல; பண்புற. இரித்து - கெடுத்து. (10) | இருந்த வாறுபல நாள்கழி வெய்த | | வீது தேர்ந்தவுணர் சூழ்ச்சியி னாற்றான் | | அருந்த வந்தபுத லாற்றலும் வல்ல | | ராவ ரென்றுமுன்வ ருத்தம்வி ளைத்த | | திருந்து தேவர்மகிழ் செய்திட முன்போற் | | செல்லு ருக்கொடும றைத்தது நேரப் | | பொருந்த வல்லிகள்வ லந்த வுடம்பிற் | | புற்றெ ழுந்துநிமிர் கின்றதை யன்றே. |
(இ - ள்.) இங்ஙனம் தவநிலையிலே இருந்தபடியே பலகாலம் சென்றமையாலே, திருத்தமுற்ற தேவர்கள் தமக்குமுன்னர் துன்பம் விளைத்த அவுணர்கள் இத்தவநிலை அறிந்து சூழ்ச்சிவழியாலே இவ்வரியதவத்தைக் கெடுத்தற்கும் வல்லுநர் ஆவர் என்று கருதி அங்ஙனம் நிகழாமற்றடுத்து மகிழ்ச்சி விளைத்திடுதற்கு முன்போன்று செல்லுருவங்கொண்டு அத்திருமாலை மறைப்பது போன்று முன்னரே கொடிகள் முளைத்து நன்கு பொருந்தும்படி பின்னிக்கிடக்கும் உடம்பினை மறைத்துப் புற்றெழுந்து வளர்வதாயிற்று. (வி - ம்.) முன்வருத்தம் விளைத்த அவுணர் என்க. செல் - கரையான். வல்லி - கொடி. நிமிர்ந்ததை - ஐகாரம் சாரியை. (11) | புடவி மாதுகடல் வைப்பும்வை குந்தப் | | பொற்ற மாநகரு மண்மிய ணைக்கும் | | கடனி லாமையின்ம கிழ்ந்தற மன்னுங் | | கண்ண ளித்ததென வெண்ண நிரம்ப | | உடல முற்றுமறை யத்தழு விக்கொண் | | டுகந்த காட்சியினி ருந்தவ மாற்றும் | | குடந வின்றகுரி சிற்குவ ரங்கள் | | கொடுப்ப நீலவரை வேலனி னைந்தான். |
(இ - ள்.) நிலமகள் தான் திருப்பாற் கடலினாதல் வைகுந்தமென்னும் பொலிவுடைய நகரத்தினாதல் சென்று தனது கணவனாகிய திருமாலை அணுகித் தழுவிக்கொள்ளும் கடப்பா டிலாமையினாலே தான் ஆற்றிய அறம் இங்ஙனம் அவனோடு நிலைபெறுமிடமொன்றனை அளித்தது என்னும் கருத்து மிகுதலானே அத்திருமாலுடலை எஞ்சாது மறை |