பக்கம் எண் :

882தணிகைப் புராணம்

யும்படி தழுவிக்கொண்டு மகிழ்ந்த தொருபடித்தாகப் புற்றுமூடப்பெற்றுப் பெரிய தவத்தினை இயற்றும் குடக்கூத்தினை விரும்பிய திருமாலுக்கு வரமருளத் தணிகைப்பெருமான் திருவுளங்கொண்டனன்.

(வி - ம்.) புடவிமாது - நிலமகள். பொற்ற - பொலிந்த; பொன் மயமான எனினுமாம். கண் - இடம். குடம் - குடக்கூத்து.          

(12)

 பாரி டம்புடைபல் கோடிந டப்பப்
           பரந்து தேவர்பனி மாமலர் தூர்ப்ப
 வாரி டம்பனுவல் வல்லவர் போற்ற
           வார ணங்கண்முனி வோர்கடு திப்பக்
 காரி டங்கொண்முர சங்கள் கறங்கக்
           காமர் தந்திரியின் யாழிசை தேக்கப்
 போரி டங்கொண்மணி மாமயி லூர்ந்து
           பூர ணப்புனித னாங்கெதி ருற்றான்.

(இ - ள்.) பலகோடி பூதகணங்கள் புடைசூழ்ந்து வரவும், தேவர்கள் வானிடத்தே பரவிக்குளிர்ந்த சிறந்த மலர்களைத் தூவவும், ஆகமும் பனுவலும் வல்லவர் வாழ்த்தாநிற்பவும், மறைகளும் முனிவரும் வாழ்த்தாநிற்பவும், கரிய கண்ணையுடைய முரசங்கள் முழங்கவும் அழகிய நரம்பினையுடைய இனிய யாழிசை நிரம்பவும், போரின் கண் சிறந்த இடத்தையுடையதாகிய அழகிய பெரிய மயிலையூர்ந்து முழுமுற்றுந் தூயவனான முருகப்பெருமான் அவ்விடத்தே அத்திருமாலுக்கெதிரே எழுந்தருளினன்.

(வி - ம்.) பாரிடம் - பூதம். ஆரிடம் - ஆகமம். ஆரணங்கள் - மறைகள். இடம் - கண். தந்திரி - நரம்பு.

(13)

 களைக ணானருளி னாலுயர் பானு
           கம்ப னண்மையி னடைந்து பிடித்த
 வளைக ளாயிர முரன்றத ழக்கம்
           வார்செ வித்துளைநி ரம்பலும் யோகில்
 திளையு ளந்தனை விடுத்தனன் மெல்லச்
           சிறையி னின்றும்வெளி வந்திட லுற்றான்
 அளையி ருந்துரிக ழற்றி வெளிக்கொ
           ளாடுபாம்பொடு மலைத்தனன் மாயோன்.

(இ - ள்.) எப்பொருட்கும் புகலிடமாகிய எம்பெருமான் திருக்குறிப்பினை உணர்ந்துகொண்ட சிறந்த பானுகம்பன் என்பவன் அண்மையிற் சென்று ஊதிய சங்குகள் ஆயிரமும் ஒருங்கே முழங்கிய முழக்கம் திருமாலுடைய நெடிய செவித்துளையிற்புக்கு நிரம்புதலானே, அவன் யோகுபட்டுப் பொருளொடு இரண்டறக் கலந்துள்ள தன் நெஞ்சத்தை அந்நிலைமையினை விட்டு மெல்ல அச்சிறையினின்றும்