புறவுலகத்தே கொணர்ந்து வந்தவன் புற்றினூடிருந்து தோலுரித்துப் புறப்படாநின்ற ஆடுமியல்புடைய பாம்பினையே ஒத்திருந்தான். (வி - ம்.) களைகண் - துன்ப மகற்றுதற்குரிய இடம்; புகலிடம். பானுகம்பன் - ஆயிரந்தலையுடைய வொருபணியாளன். தழக்கம் - ஒலி; விடுத்தனன் : முற்றெச்சம். வந்திடலுற்றான் : வினையாலணையும் பெயர் ! திருமால். (14) | வண்டு வார்தொடைகு டைந்துமு ழங்க | | வான துந்துமிம ருங்கு முழங்க | | அண்டர் நோக்கமருண் மேனி துழாவ | | வாடு வார்கொடிவி சும்புது ழாவக் | | கொண்ட னேர்கருணை யான்வெளி நின்ற | | கோல நோக்கியிரு கைமலர் கூப்பிக் | | கண்டு ளிப்பவுடல் வார்மயிர் பொங்கக | | காத லாற்கழல்ப ணிந்து துதிப்பான். |
(இ - ள்.) வண்டுகள் தனது நெடிய கடப்பமலர் மாலையினைக் கிண்டி ஆரவாரிப்பவும், தேவதுந்துபி பக்கத்தே முழங்கவும், தேவர்களுடைய ஆராநோக்கம் தனது அருட்டிருமேனியைத் துழாவாநிற்பவும் ஆடாநின்ற தனது நெடிய சேவற்கொடி வானத்தைத் துழாவாநிற்பவும் முகிலை ஒத்தபேரருட் பெருமான் வெளிப்பட்டு நின்ற திருக்கோலத்தை அத்திருமால் தனது இரண்டு மலர்போன்ற கைகளைக்கூப்பித் தனது கண்கள் இன்ப ஊற்றெடுப்பவும், உடல்மயிர்க் கூச்செறியவும், பேரன்பாலே பெருமானுடைய திருவடிகளை வணங்கி வாழ்த்துபவன். (வி - ம்.) வார் - நீண்ட. கொண்டல் - முகில். துதிப்பான் : வினையாலணையும் பெயர். (15) | நாடாது வேட்ட நனிவழங்கும் வள்ளன்மை | | தாடா "நர்பாற் றகைக்குங் கருணையான் | | ஓடாத தானை யுருமுச் சினச்சூரைக் | | கோடாப்போர் வெங்களத்துக் கொன்ற விறைபோலும் | | குருபரனைத் தாழ்த்த குருநாதன் போலும். |
(இ - ள்.) இரவலரின் நன்மை தீமை ஆராயாது அவர் வேண்டுவனவேண்டியாங்குப் பெரிதும் வழங்குதற்குரிய தனது வள்ளற்றன்மையைத் தன் திருவடிகளை வணங்கும் மெய்யடியார்பாலும் வைக்கும் பேரருட் பெருமான் (யாவனோ வெனில்?) போரின்கண் புறமிடாத படையினையுடைய இடியை யொத்த வெகுளியையுடைய சூரபதுமனை அறங்கோணாத போர் ஆற்றுதற்கிடனான வெவ்விய களத்திலே கொன்ற ஆறுமுகக் கடவுளேயாவன் ஆசிரியனாகிய சிவபெருமானையும் தாழச்செய்த சிறப்பினையுடைய குருநாதனே ஆவன். |