பக்கம் எண் :

888தணிகைப் புராணம்

இந்திரன் அருள்பெறு படலம்


 அமராப தீச னடிவணங்கி னோர்கள்
 இமையார் வணங்க விருப்பதற் கெனையந்
 தமரா னவருந் தழனரக நீந்தி
 நிமிர்போக வாரி நெடுவிசும்பிற் றோய்வார்.

(இ - ள்.) அமராபதீசன் என்னும் திருப்பெயரையுடைய சிவபெருமானை வணங்கி வழிபாடியற்றினோர் தேவர்களும் வணங்கும்படி வீற்றிருப்பதற்கு ஐயம் யாதுளது? அவரேயன்றி அவருடைய மூவேழ்தலை முறைச்சுற்றத்தாரும் தீப்போன்ற கொடிய நிரயத்தினின்றும் கரையேறி நெடிய வானுலகமெய்திப் பெருகிய இன்பநுகர்ச்சி என்னும் கடலின் கண் மூழ்குவர் என்று சான்றோர் கூறுபவாகலான்.

(வி - ம்.) "இந்திரனால் நிறுவப்பட்ட அருட் குறியின்கண் உறைதல்பற்றி அமராபதீசன் என்று திருப்பெயர் உண்டாயிற்றென்க, என்று சான்றோர் கூறுபவாகலான் என்னும் ஏதுவினைக் குறிப்பாற் கொள்க.

(1)

 அரம்பு முற்றிய தான வக்குல மந்த முற்ற வமர்த்துவிண்
 வரம்பு முற்றுல கம்பு துக்கிவ ழாமை நற்குடி யேற்றினான்
 நிரம்பு மாதவ மின்மை யாற்சில நீடு செல்வம ளித்திலான்
 உரம்ப டைத்தவை யெய்து வாமென வுன்னி னானும்பர் காவலன்.

(இ - ள்.) குறும்பு மிகுந்த அசுரக்கூட்டம் முடிவினை யடையும் படி போராற்றி வானத்திலுள்ள வரையறை செய்யப்பட்ட உலகங்களைப் புதுப்பித்து வழுவாதவாறு வானவர்களை நன்மையுறக் குடியேற்றியருளிய முருகப் பெருமான், அவ்வானவர்க்கு நிரம்பிய தவப்பயன் இன்மை கருதிச் சில நெடிய செல்வங்களை அளித்திலன். வானவர் வேந்தனாகிய இந்திரன் ஊக்கம் பெற்று அச்செல்வங்களைப் பெறுவாம் என்று கருதினன்.

(வி - ம்.) அரம்பு - குறும்பு. அத்தம் - முடிவு. உரம் - ஊக்கம். உம்பர் காவலன் - இந்திரன்.

(2)

 விண்ணி னீங்கிய டுத்து நீலவி லங்கல் யோசனை பாதமொன்
 றென்ன நின்றதெ னாது சாரிரு டூங்கி வாசமு மிழ்ந்துதேம்
 கண்ணெ கிழ்ந்தும லர்ந்தொ ழுக்குக டம்பு முற்றிய சூழலை
 நண்ணி யங்கண கழ்ந்து தீர்த்தந யந்தி லிங்கமி ருத்தினான்.

(இ - ள்.) இக்கருத்தினாலே இந்திரன் தனது வானுலகத்தை நீத்து மண்ணுலகினை எய்தி இத்தணிகை மலையின் தென்பால் அரையோசனை தூரத்தே அமைந்த இருண்மிக்கு நறுமணங்கமழ்ந்து இனிய தேனைமலர்ந்து துளியாநின்ற கடப்ப மரங்கள் மிக்கதொரு சோலையை