பக்கம் எண் :

இந்திரன் அருள்பெறு படலம்889

யடைந்து அவ்விடத்திலொரு தீர்த்தமகழ்ந்து மேலும் விரும்பி அருட்குறியும் நிறுத்தினன்.

(வி - ம்.) விலங்கல் - மலை. யோசனை பாதமொன்று - அரையோசனை. தெனாதுசார் - தென்பால். முற்றிய - மிகுந்த; சூழ்ந்த எனினுமாம்.

(3)

 ஐந்தெ னும்முப சார முற்றவ தற்கி யன்றவெ லாந்தழீஇ
 ஐந்து சுத்திபு ரிந்தி ருந்தவி சைந்த மைத்ததி லானனம்
 ஐந்து கொண்டருண் மூர்த்தி மூலமு மார்த்தி யாவர ணங்களோர்
 ஐந்து முற்றவ ழாது பூசனை யைந்த டக்கின னாற்றினான்.

(இ - ள்.) பார்த்திவோபசாரம் முதலாக ஐந்து வகைப்பட்ட உபசாரமும் செய்து முடித்தற் பொருட்டு அதற்கு வேண்டிய எல்லாப் பொருளையும் ஈட்டிக்கொண்டு இலிங்கசுத்தி முதலிய ஐந்து சுத்தியுமியற்றி, ஐந்து பெரிய பீடமமைத்து அவற்றில் ஐந்து முகங்களையுமுடைய மூர்த்திகளை இருத்தி. ஐவகைப்பட்ட ஆவரணங்களையும் வழுவாதபடி தனது ஐம்பொறிகளையும் அடக்கியவனாய் வழிபாடு செய்தனன்.

(வி - ம்.) தவிசைந்தமைத்து அதில் என்புழி, ஒருமை பன்மை மயக்கம். ஆவரணங்கள் ஐந்தாவன ; பஞ்சப்பிரம சடங்கதேவர், வித்தியேசுரர், கணேசுரர், உலோகபாலர், அவருடைய படைக்கலங்கள் என்னும் ஐந்துமாம்.

(4)

 புராரி பாங்கர்வ லாரி பூசைபு கன்று வைகலு மின்னணம்
 பராவியாற்றியி ருந்த னன்பயி லேனை மாதிரத் தார்களும்
 ஒராத பத்தியின் விண்ணு ளாகுமு டங்கு வந்தவ ருங்களி
 விராவி யன்பொடு மங்க ணங்கண்வி ழைந்து மாதவ மாற்றினார்.

(இ - ள்.) முப்புர மெரித்த விரிசடைக் கடவுளின்பக்கலிலே இந்திரன் இவ்வாறு நாடோறும் விரும்பிப் போற்றி வழிபாடியற்றியிருந்தனனாக. இனி, பயிலாநின்ற ஏனைத்திசைக் காவலரும் நீங்காத அன்பினையுடைய ஏனைத்தேவர்களும் ஒருசேர வந்து அரிய மகிழ்ச்சியோடு கலந்து இடந்தோறும் இடந்தோறு மிருந்து தத்தமக்கு வேண்டிய பேறுகளை விரும்பிப் பெரிய தவத்தை
இயற்றியிருப்பாராயினர்.

(வி - ம்.) புராரி - சிவபெருமான். வலாரி - இந்திரன். புகன்று - விரும்பி. மாதிரத்தார் - திசைகாவலர். உடங்கு - ஒருசேர.          

(5)

 ஆண்டு செல்லவி லிங்க நின்றம ராப தீசனெ ழுந்தனன்
 பூண்ட காதலின் வீழ்ந்து வீழ்ந்துபு ரண்டு சூழ்ந்துகைத் தட்டமிட்
 டீண்டு மாமறை வேண்டு மவ்வள வுங்க ரைந்தெதி ராடிய
 மாண்ட வச்சிர னோங்க லேறும்வ ரங்கொ டுத்தும றைந்தனன்.

(இ - ள்.) ஓராண்டு சென்ற பின்னர் சிவலிங்கத்திருவுருவினின்றும் அமராபதீசன் வெளிப்பட்டருளினன். இறைவனைக் கண்டவள