(வி - ம்.) குரும்பி - புற்றாஞ்சோறு. தேரிய - உண்ண ஆராய. முதையல் - உழுத புழுதியை யுடைய முல்லை. படப்பை - ஊர்ப்புறத் தோட்டம். ஆரிய - உண்ண. குறுஞ்சுனை - முல்லைக் கருப் பொருள். ஆவி - தடாகம். மூசிய - மொய்த்த. வரம்பிலார் - கயவர். படப்பையும் என்பத னும்மையை முதையலோடுங் கூட்டுக. இயன் முறையாவது - விரும்பினவற்றைச் செய்கின்ற ஒழுங்கு. "தேவரனையர் கயவர் அவரும் தாம், மேவன செய்தொழுக லான்" என்னும் குறளின் கருத்தமைந் திருத்தல் காண்க. (166) | வேழம் வாய்திறந் தெழுமணி புறநகர் | | வேலையு முரம்பாக்க | | ஆழி வீசிய மணிகுளஞ் சுனையவ | | லடவவை வயன்மாதர் | | கோழி யோச்சிய குழைபடக் கிழிந்தகுன் | | றகத்திறால் புன்னாக | | வாழி தேத்தடை யருவிகள் பெயர்த்தலை | | வாயிடும் வளனோர்சார். |
(இ - ள்.) கரும்புகளானவை முதிர்ந்து வெடித்தலால் எழுகின்ற முத்தங்கள் புறநகரையும் கடலையும் கல்விரா யுயர்ந்த நிலமாகச் செய்ய, கடலானது அலைகளால் வீசிய முத்துக்கள் மருத நிலத்தின்கணுள்ள குளங்களும் குறிஞ்சி நிலத்தின்கணுள்ள சுனைகளு மாகிய இவற்றின் பள்ளங்களைத் தூர்க்க, மணிகளை, மருதநிலப் பெண்கள் கோழியை யெறிந்த காதணிகள் படுதலால் குன்றினிடத்துக் கிழிந்தனவாகிய தேன் கூட்டினின் றொழுகுந் தேனும், சுரபுன்னை மரத்தினிடத்துள்ள தேன் கூட்டினின் றொழுகுகின்ற தேனருவிகளும் பெயர்த்துக் கடலினிடத்துச் சேர்க்கும் வளமும் ஒரு பக்கத்துள்ளது. (வி - ம்.) முரம்பு - கல்விரா யுயர்ந்திருக்கும் நிலம். புறநகர் வேலை - உம்மைத் தொகை. மணி எழுவாய். அவல் - பள்ளம். "நாடா கொன்றோ காடா கொன்றோ, அவலா கொன்றோ மிசையா கொன்றோ" என்னும் புறநானூற்றா லறிக. அவை - அம்மணிகளை. கோழி - இரண்டன்றொகை. இறால் - தேன்கூடு. புன்னாகம் - சுரபுன்னை. வாழி : அசை. தேத்தடை - தேன்கூடு. அவைகளைப் பெயர்த்து அலைவாயிடு மெனக் கூட்டுக. பெருஞ் செல்வ ரென்பது தோன்றக் "கோழி யோச்சிய குழை" எனக் கூறினார். "விரீஇ யுற்றவர் கோழி எறிந்த ஒண்குழை" என்னும் சிந்தாமணியா னறிக. (167) | கான வாரணங் கழனியுங் கானலுங் | | கலாவுறக் கடிநல்லூர்த் | | தான வாரணம் பாக்கமும் பாடியுந் | | ததைதரத் திரைமுந்நீர்க் | | கூன வாரணங் கொழும்புனற் கால்களுங் | | குரைப்பறாக் கானியாற்றுப் |
|