| நாக மருள்பெறு படலம் | | நாக நாடிய நல்லரு ணல்கிய | | | ஏக வானைத் தணிகை யிறைவனைப் | | | பாக மின்றெனி னும்பணி கின்றவர் | | | தேக மன்றுகொ றேகமென் றாவதே. |
(இ - ள்.) வாசுகியென்னும் பாம்பு விரும்பிய நல்ல வரத்தை வழங்கிய தனிமுதல்வனாகிய திருத்தணிகைப் பெருமானைப் பரிபக்குவமில்லை யெனினும் வணங்காநின்ற அன்பர் உடலம் அன்றே உடலம் என்னும் சிறப்பிற்கு ஏற்றதாகும். (வி - ம்.) உடற்பயன் பிறப்பறுத்தற்குக் கருவியாதல். வணங்காதவுடல் பயனில் உடலாம் வணங்குமுடல் பயன் றரு நல்லுடலாம் என்பதாம். பாகம் - பரிபக்குவம். தேகம் - உடம்பு. (1) | | முன்னொரு காலையின் முரண்மணி யிமைக்கு | | | முடிகெழு சுரர்களு மவுணர்க டிரளும் | | | துன்னிய சமரிடை யிருதிறத் தவருந் | | | தொலைந்தவர் தொகைபல வாதலை நோக்கி | | | இன்னுயி ரிறப்பதன் றாயமர் புரிய | | | வெண்ணின ரதுபெற மாயனை யடுத்தார் | | | அன்னவன் கடல்கடைந்த தமுதெடுத் தயின்றா | | | லனுங்கல மதுபுரி வாமென வலித்தான். |
(இ - ள்.) பண்டொரு காலத்திலே தம்முள் மாறுபட்ட ஒளியுடைய மணிகள் சுடரும் முடியணிந்த தேவர்களும் அவுணர்கள் கூட்டமும் நெருங்கியியற்றிய போரின்கண் இருதிறத்தவருள்ளும் இறந்துபட்டோர் தொகை மிகப்பலவாதல் கண்டு, இனி, போர்செய்யுங்கால் இனிய உயிர்இறவாதபடி போர்செய்தற்கு உபாயம் ஒன்றனைக் காணக்கருதினர். அவ்வுபாயத்தைப் பெறுதற்குத் திருமாலை அடுத்தனர். அவனும் திருப்பாற்கடலைக் கடைந்து அதன்கண் தோன்றும் அமிழ்தத்தை எடுத்துண்டால் இறவேம் ஆகலின் அச்செயலினைச் செய்வேம் என்று துணிந்தான். (வி - ம்.) மாயன் - திருமால். அன்னவன் - திருமால். அனுங்கலம் - அழிகிலம்; இறவேம். (2) | | நிரைகதிர்க் குளிர்மதி தறியென நிறுவி | | | நெடுகிய மந்தர மத்தென நாட்டி | | | உரைதகு வாசுகி கயிறெனப் பூட்டி | | | யொளிர்மணிப் பாற்கடல் கொறுகொறு வென்ன |
|