பக்கம் எண் :

கடவுள் வாழ்த்து9

யுடைய தக்கன் உள்ளத்தின்கண் நாணமடையும்படி, வேதியனாகிய தாதையைக் கோறலாகிய பாதகமே (சிவனடிக் கன்பினாலே) சிவபுண்ணியமாய் முடியும்வண்ணஞ் செய்த அழகிய பெருமைபொருந்திய சண்டேசுரரது திருவடிகளை வணங்குவாம்.

(வி - ம்.) நாணிய - நாண; கருத்து வகையான் புண்ணியம் பாவமாகவும், பாவம் புண்ணியமாகவுங் கொள்ளப்படுமென்க; "அரனடிக் கன்பர் செய்யும் பாவமு மறம தாகும், பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும், வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமையாகி, நரரினிற் பாலன் செய்த பாதக நன்மை யாய்த்தே" என்னுஞ் சிவஞான சித்தித் திருவிருத்தம் ஈண்டுக் கருதத் தக்கது. ஆர்விகுதி இழித்தற்கண் வந்தது.

(9)

திருத்தொண்டர்

 பாய வாருயிர் முழுவதும் பசுபதி யடிமை
 ஆய வெவ்வகைப் பொருள்களு மவனுடைப் பொருள்கள்
 மேய விவ்வண மலதுவே றின்றென வுணர்ந்த
 தூய மெய்த்தவத் தடியவர் துணையடி தொழுவாம்.

(இ - ள்.) எங்கும் நிறைந்த மக்கள் ஆகிய உயிர்கள் எல்லாம் இறைவனடிமைகளாம், தோன்றிய (நிலமுதனாதமீறாகிய) எத்திறப் பொருள்களும் அப்பசுபதிக்கு உடைமைப் பொருள்களாம், அவைகட்குப் பொருத்தமாய் இவ்வாறின்றிப் பிறவாறின்றென மெய்யுணர்வானறிதலாகிய புனிதமான மெய்த் தவத்தையுடைய சிவனடியார்களுடைய இரண்டு திருவடிகளையும் வணங்குவாம்.

(வி - ம்.) ஏனைய தவங்களெல்லாம் மலநடையாய்ப் பொய்யாகப் போதலின் இங்ஙன முணர்தலைத் தூயமெய்த் தவமென்றார்; இதனைப் 'பரனுணர்வி னாலுணரு மெய்த்தவரை மேவா வினை' என்ற சிவஞான போத வெண்பா அடியானு முரையானு முணர்க. ஆருயிர் முழுவது மென்பது எஞ்சாப் பொருட்டாய் மூவகை யான்மாக்களையு முணர்த்தி நின்றது; மேய என்பது மேவிய என்பதன் விகாரம்.

(10)

ஆசிரியர் பரம்பரை

 அருள்வளர் நந்தி மேதகை விளக்கி
           யருள்சிவ ஞானபோ தத்தைத்
 தெருள்வளர் தமிழ்ச்செய் தளித்தமெய் கண்ட
           தேவனற் சந்ததி விளங்க
 வருமொரு துறைசைத் திருநகர் நமச்சி
           வாயதே சிகனொடு மிந்தக்
 குருபரன் வழிவந் தருணனி கொழிக்குங்
           குரவர்கள் பலரையுந் துதிப்பாம்.

(இ - ள்.) கருணை மிகுகின்ற பெரிய தகுதியையுடைய நந்தியம் பெருமான் தம் மாணாக்கராகிய சனற்குமார முனிவர்க்கு விளக்கியுப

 1.  'தமிழ் செய்' என்றிருப்பிற் பொருத்தம்.