லோடு வந்து மகிழ்ச்சியோடு ஆடித் தவஞ்செய்து பலவாகிய செல்வங்களையும் பெற்றுத் தனி முதல்வனாகிய முருகப்பெருமானுடைய இனிய அருளாலே தனது நாகநாட்டினை எய்தி உறைவானாயினன். (வி - ம்.) மேக நிறத்தினன் - திருமால். விழு - சிறப்புடைய. ஓகை - உவகை. ஏகன் - இறைவன். (8) | திண்மைவி ழைந்தவர் நோய்நனி தீரவி ழைந்தோர்கள் | | ஒண்மைவி ழைந்தவர் செல்வம்வி ழைந்தவ ரொப்பற்ற | | வண்மைவி ழைந்தவர் நாகசு னைக்கண்ம கிழ்ந்தாடின் | | அண்மையி னெய்துப வண்ணல ருட்கொரி லக்காகி. |
(இ - ள்.) வலிமையை எய்த விரும்புவோரும், தமக்குற்ற நோய் மிகவும் தீர்தற்கு விரும்பியவரும், புகழை விரும்பியவரும், செல்வத்தை விரும்பியவரும், ஒப்பில்லாத வள்ளன்மையுடையராக விரும்பியவரும் இந்நாகசுனையின்கண் உவகையோடு ஆடின் முருகப்பெருமானுடைய திருவருட்கும் இலக்கமாகித் தாந்தாம் விரும்பியவற்றை விரைவிலேயே பெறுவர். (வி - ம்.) திண்மை - வலிமை. ஒண்மை - புகழ். அண்மை - காலத் தின்மேற்று. எய்துப : பலர்பால் வினைமுற்று. (9) | அராத்தவ மாற்றிவி ழைந்தன பெற்றத றைந்தாமால் | | இராப்பக லற்றசு கத்துளம் வைப்பவி ரும்போதம் | | விராய்த்துயர் வீட்டிய வந்தணிர் வேலைய டைத்திட்டோன் | | உராய்த்தள ருள்ளமொ ருங்கவு ழந்தது ரைப்பாமால். |
(இ - ள்.) உறக்கமும் விழிப்புமற்ற பேரின்பத்தின்கண் நெஞ்சத்தை நிலைநிறுத்தப் பெரிய மெய்யுணர்வு கைகூடப் பெற்றமையாலே உலகத்துன்ப மனைத்தையும் ஒருங்கழித்த துறவீரே ! இதுகாறும் வாசுகி தவம்புரிந்து தான் விரும்பிய பேறுகளைப்பெற்ற வரலாற்றினைக் கூறினாம், இனிக் கடலின்கண் அணைகட்டியவனான இராமன் ஈண்டெய்தித் துன்பத்தாலே மெலிந்த தனது நெஞ்சினை ஒருவழிப்படுத்துத் தவமாற்றிய வரலாற்றினைக் கூறுவேம் கேண்மின். அரா - பாம்பு. இரும்போதம் - மெய்யுணர்வு. உராய் - எய்தி. (10) நாக மருள்பெறு படலம் முற்றிற்று. ஆகச் செய்யுள்-2085. |