இராமன் அருள்பெறு படலம் | இல்லறத் திருப்பினுந் தணிகை யெம்பிரான் | | நல்லருட் குரியவர் நவையி னீங்கினார் | | வெல்லலர் வினைதுற வறத்தின் மேவினும் | | வல்லிதன் கேள்வனை மனத்துன் னார்களே. |
(இ - ள்.) திருத்தணிகை மலையின்கண் எழுந்தருளியிருக்கும் எம்மையாளுடைய முருகப்பெருமானுடைய நல்ல திருவருட்குரிய அன்பர் இல்லறத்திலேயிருப்பினும் குற்றத்தினின்றும் நீங்கிச் சிறந்தோரேயாவர். துறவறத்திலே நிற்பினும் வள்ளி கொழுநனாகிய அப்பெருமானை நெஞ்சின் கண் நினையாதவர் இருவினைகளையும் வெல்லவியலாதவரே யாவர். (வி - ம்.) நவை - பிறவித்துன்பம். வல்லி - வள்ளியம்மையார். இச் செய்யுளில். | "ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே. | | மெய்யுணர் வில்லா தவர்க்கு" (குறள் - 354) |
என்னுந் திருக்குறட் கருத்துப் பொதியப்பட்டுளது. (1) | அறந்தலை யெடுத்திடு மயோத்தி மாநகர் | | சிறந்திடுந் தசரதச் செல்வத் தாதைவாய்ப் | | பிறந்தசொற் பிழைப்பதற் கஞ்சிப் பெய்கழல் | | மறந்தழை யிராமன்வார் வனத்துச் செல்லுநாள். |
(இ - ள்.) நல்லறம் ஓங்கித் தழைத்தற்கிடமான அயோத்திமா நகரத்தின்கண் சிறந்திருந்த செல்வமுடைய தசரதன் என்னும், தன் தந்தையின் திருவாயின்கட் டோன்றிய சொல் பொய்படுதற் கஞ்சிக்கட்டிய கழலையுடைய வீரம் மிகுந்த இராமன் நெடிய காட்டின்கண் செல்கின்ற அந்த நாளிலே. (வி - ம்.) தலையெடுத்திடல் - ஓங்கிவளர்தல். தசதிசையினுஞ் செல்லும் ரதத்தையுடைய செல்வத் தாதை என்றவாறு. மறம் - வீரம். வார் - நெடிய. (2) | அரக்கர்பட் டிமைபுரிந் தஞ்சொற் சீதையைக் | | கரக்கவெங் கவலையங் கடலுட் டாழ்ந்துராய்ப் | | பரக்குமுந் நீர்க்கடல் பருகு மாதவன் | | இருக்கைபுக் கடித்துணை யிறைஞ்சிக் கூறினான். |
(இ - ள்.) அரக்கர் வஞ்சனை செய்து அழகிய மொழியினையுடைய சீதையைக் கவர்ந்து கொண்டுபோய் மறைத்துவிட்டமையானே துயரக்கடலினுள் மூழ்கிக் கரையை மோதிப் பரவாநின்ற மூன்று நீர்த்தொகுதி |