யாகிய கடலைக்குடித்த பெரிய தவத்தினையுடைய அகத்திய முனிவனிருப்பிடத்தையடைந்து அவன் அடிகளை வணங்கிக் கூறியவன். (வி - ம்.) பட்டிமை - வஞ்சனை. கரத்தல் - ஒளித்துவைத்தல். முந்நீர் - ஆற்றுநீர் ஊற்றுநீர் மழைநீர் என்பன. மூன்று நீர்மையுமாம். கூறினான் : வினையாலணையும் பெயர். (3) | ஓங்கிய விந்தவெற் புறுத்தி மண்ணிடை | | நீங்குபு பனிவரை நிலனை நேர்பெறத் | | தாங்கிய வெந்தைசா னகியை வௌவிய | | தீங்கினர் தமைத்தெறுந் திறநல் கென்றலும். |
(இ - ள்.) உயர்ந்த விந்தமலையை நிலத்தூடழுத்தித் தென்னாட்டிலே சென்று இமயமலையோடு தென்னாடு சீரொத்திருப்பத் தாங்கிய எந்தையே! சீதையைக் கவர்ந்த தீயவரான அரக்கரை அடியேன் கொன்றொழித்தற்குரிய ஆற்றலை அருள்க என்று வேண்டியவளவிலே. (வி - ம்.) மண்ணிடையுறுத்தி என்க. நீங்குபு - நீங்கி. நேர் - சமம். தீங்கினர் - அரக்கர். தெறுதல் - கொல்லல். (4) | செந்தழன் முளிவனஞ் சிதைத்திட் டாலென | | ஐந்தெழுத் துண்மையா லழிவி லாணவ | | மைந்தினை முருக்கிய மாத வத்தினான் | | கொந்தொளி மணிமுடிக் குரிசிற் கோதுவான். |
(இ - ள்.) திருவைந்தெழுத்து மந்திரந் துணையாயமைந்தமையானே செவ்விய நெருப்பு உலர்ந்த காட்டினை அழித்தாற்போன்று அழிவில்லாத இயல்பினையுடைய ஆணவமலத்தினது ஆற்றலை அழித்த பெரிய தவத்தினையுடைய அவ்வகத்திய முனிவன் கொத்தாக ஒளிவிடும் மணிகளையுடைய முடியினையுடைய அவ்வீராமனுக்குக் கூறுவான். (வி - ம்.) முளிதல் - உலர்தல். ஆணவம் நித்தியமாகலின் அழிவில் ஆணவம் என்றார். மைந்து - ஆற்றல். கொந்து-கொத்து. (5) | பகைபிணி மண்ணைபன் மந்தி ரத்தினாம் | | மிகையறன் கடையுள வெருட்சி பித்திடர் | | வகையெனைத் தையுமற மாற்றி யாவர்க்கும் | | தகைநல மளிப்பது தவள நீறரோ. |
(இ - ள்.) பகைவரானும் பிணியானும் பேயானும் மாரண மந்திர முதலியவற்றானும் உண்டாகும் பெருந்துயரமும், தீவினையானே உளவாகும் வெருட்சி பித்து முதலியனவுமாகிய துன்பங்களின் வகை எத்தனையுள வாயினும் அவையனைத்தையும் துவரத்தீர்த்து எத்தகையோர்க்கும், அழகும் நலமும் அளிக்குமியல்புடையது திருவெண்ணீறேயாகும். |