பக்கம் எண் :

908தணிகைப் புராணம்

 அத்தகு சைவ மூன்றதாங் கற்ப
           மனுகற்ப முபகற்ப மென்ன
 உத்தம மான கற்பமென் றுரைப்ப
           துரைத்தவான் மயமனு வோடும்
 பைத்ததா மரைமெல் லடையின்வா னேற்றுப்
           பரந்தமேல் வழும்பினை நீக்கி.

(இ - ள்.) சைவத்திருவெண்ணீறு வீடுபேற்றினை வழங்குவதோடன்றிப் புத்திப்பேற்றினையும் விரும்பின் வழங்குவதாம். அத்தகைய சைவத்திருநீறு கற்பம் அனுகற்பம் உபகற்பம் என்று மூன்று வகைப்படும். அவற்றுள் தலை சிறந்ததான கற்பமென்பது முற்கூறப்பட்ட ஆனினது சாணகத்தை (நிலத்தின் வீழுமுன்னர்) இடை வெளியிலேயே பசிய தாமரையிலையிலேற்று அதன்மேற் பரவியுள்ள வழும்பினை அகற்றி.

(வி - ம்.) முத்தி - வீடுபேறு. புத்தி - அறிவு. வெஃகின் - விரும்பினால். உத்தமம் - தலையாய. ஆன்மயம் - சாணகம். பைத்த - பசியதான.

(15)

 கூட்டுமா னைந்தும் பொழிந்துறப் பிசைந்து
           குவால்படத் திரட்டியோ மத்தின்
 நீட்டுநா வெரியிட் டெடுத்தரித் தாளா
           நிறையமைத் திருத்தியோம் புவதாம்
 காட்டுலா மயத்தை யிடித்துமுன் போலக்
           காண்பதா மனுகற்ப மற்ற
 தோட்டெரி மேய்ந்து வனம்படு நீற்றை
           யுரைத்தவா றுஞற்றுவ தாகும்.

(இ - ள்.) (பஞ்சகவ்வியம் செய்யுமுறைப்படி) கூட்டிய பஞ்சகவ்வியத்தினை (அச்சாணகத்தின்மேலே) சொரிந்து நன்றாகப் பிசைதல் செய்து உண்டை வடிவமாகத் திரளச்செய்து ஓமகுண்டத்தின் எழுநாவினையும் வெளியிடுகின்ற அழலிலிட்டு (வெந்தபின்னர்) எடுத்தல் செய்து வடிகட்டுதல்செய்து ஆட்சிசெய்யாத புதுப்பானையில் வைத்துப் பாதுகாக்கப்படுவதாகும். காட்டின்கண்ணே பொருந்துகின்ற சாணகத்தைக் கொண்டு (உரலிலிட்டு) இடித்தல்செய்து முன்னர்க்கூறியது போல (பஞ்சகவ்விய முதலியவைவிட்டுப் பிசைந்து உண்டைசெய்து யாகாக்கினியிலிட்டு எடுத்துவைப்பது) அனுகற்பமாகும். மற்றைய உபகற்ப நீறானது காட்டின்கண்ணே ஓடிப்பற்றுகின்ற அக்கினி உண்ணலால் உளவாகிய சாம்பரை மேலே சொல்லியவாறு ஓமாக்கினியிலிட்டு எடுத்து அரித்து புதுப்பானையில்
வைப்பதாகும்.

(வி - ம்.) துவால் - உண்டை. ஆளாநிறை - ஆளாதமிடா. ஓமம் - வேள்வி. ஆமயம் - சாணகம்.

(16)