| ஐந்தினை வாக்க லகோரத்தாற் பிசைத | | லழலிடை யுருட்டிவைத் திடன்மால் | | சிந்துதற் புருடத் தாற்புகை பீதஞ் | | சிவப்பறு கருமையுந் தீர | | இந்துநேர் பூதி யெடுத்தலீ சம்பெய் | | திருத்தல்கா யத்திரி மனுவால். |
(இ - ள்.) அரசனே (இங்ஙனம் நீறுளவாக்கும்) மந்திரத்தைக் கேட்பாயாக. வாம மந்திரத்தால் சாணகத்தைக் (கீழ்விழாது) ஏற்க. அகோரமந்திரத்தால் (சாணகத்து) பஞ்சகவ்வியத்தினை வாக்கல். அகோரமந்திரத்தால் பிசைக. ஆன்மாக்களுக்குள்ள மயக்கத்தைச் சிந்துகின்ற தற்புருட மந்திரத்தால் (சாணகத்தை) யுருட்டி அழலின்கண் வைக்க, புகை, மஞ்சள், சிவப்பு, கருப்பாகிய இந்நிறங்களுள்ளனவற்றை நீக்கி விந்துவையொப்பாகிய வெள்ளிய நீற்றினை ஈசானமந்திரத்தை யோதியெடுக்க. சிவகாயத்திரி் மந்திரத்தையோதி (ஆளாத பாண்டத்தில்) கொட்டித் தங்கும்படி செய்க என்க. (வி - ம்.) கேட்டி - கேட்பாயாக. ஏற்றல் முதலியன நான்கும் அல்லீற்றுடன்பாட்டு வியங்கோள். (19) | சிரநுதன் மரும முந்திநான் கினுநேர் | | திகழ்ந்தவீ சானமுன் னான்கின் | | இருமுழந் தாள்வண் புயமுழங் கைமுன் | | கையெழிற் களம்வெரிந் காதென் | | றுரைசெய்பன் னிரண்டுஞ் சத்தியோ சாதத் | | துறுத்துரந் தோணுத னான்கும் | | விரலிரு மூன்ற னளவிட லேனை | | யிடத்தொரு விரலள விடலே. |
(இ - ள்.) சிரமும், நுதலும், மார்பும், உந்தியாகிய நான்கிடங்களிலும் நேரே விளங்குகின்ற ஈசான முதலிய நான்கு மந்திரத்தால் முறையாக வணிவாய். இரண்டு முழந்தாள், இருபுயம், இருமுழங்கை, இருமுன்கை, கண்டம், முதுகு, இருகாது என்று சொல்லப்பெறுகின்ற பன்னிரண்டிடங்களிலும், சத்தியோசாத மந்திரத்தால் அணிக. மார்பு, இருதோள், நெற்றியுமாகிய நான்கிடத்தும் ஆறங்குலவளவிடுக. (இவையின்றி) ஏனையவிடங்களில் ஒருவிரலளவிடுக. (வி - ம்.) மருமம் - மார்பு. வெரிந் - முதுகு. அல் - வியங்கோள் விகுதி. (20) | வத்திரம் புலிமான் றோலிவற் றொன்றான் | | வட்டம்வாய் கொளவிர லிருநான் | | கத்தகு மளவை யிரட்டிநே | | ரகல முயரமு மாகநன் கமைத்த |
|