பக்கம் எண் :

912தணிகைப் புராணம்

 தனின்முக மொத்த வல்லன வாகா
           தயங்கிய சிரஞ்சிரஞ் செறிய
 இனியநா ணிடைக்கோத் திடையிடை முடிந்திட்
           டேற்றுநா யகமணி மேலான்.

(இ - ள்.) (இராம!) இத்தன்மையதாகிய நீற்றினை (இங்ஙனம் விதிப்படி) அணிதலோடு இறைவன் அருள் செய்வதற்கேதுவாகிய உருத்திராக்க கண்டிகையினைத் தரிப்பாயாக. (அக்கண்டிகையின் முகங்கள்) ஒருமுக முதற் பத்து முகத்தின் மேலும் பொருந்தியுள்ளனவாகிய மாலைகளில் முகங்கள் தம்முள் ஒத்தனவே யணியத்தக்கனவாகும். அங்ஙனம் முகங்க ளொவ்வாதன அணியத்தக்கனவாகா. (அவ்வுருத்திராக்கமணிகளின்) ஒன்றின் முகமும் (மற்றொரு மணியின்) முகமும் தம்முட்பொருந்த இனிமையைத் தருகின்ற கயிற்றினிடத்துக் கோவை செய்து (அம்மணியினிடையே) முடிச்சிடுதல் செய்து (அம்மணிகளுள் தலைமையான) நாயகமணியினை எல்லா மணிகளுக்கும் மேலாகக் கோத்தல் செய்க.

(வி - ம்.) சிரமென்றது உருத்திராக்கமணியின் முகத்தையென்க. கோவை செய்யுங்காலத்து முகத்தினோடு மற்றொரு மணியின் முகத்தைச் சேர்த்து கோவை செய்தல் நெறியென்பார் "சிரஞ் சிரஞ் செறியவினிய நாணிடைக்கோத்" தென்றார். மதி : முன்னிலையசை.

(23)

 சிரங்கர மணிவ சிரங்கரங் கொண்ட
           திகழ்மிடற் றணிவவெண் ணான்கால்
 உரஞ்செறி மாலை நாபியி னளவா
           முரமள வாதலு முரித்தே
 வரஞ்செறி மனுக்க ளலகிடு மாலை
           மணிகணூற் றெட்டதன் பாதி
 தரம்படு மதனிற் பாதியு மாகுஞ்
           சமைக்குமூன் றளவையு ளொன்றால்.

(இ - ள்.) (அவ்வுருத்திராக்கமணிகள்) சிரத்தினிடத்தும் கரத்தினிடத்தும் அணிவன, அச்சிரமும் கரமும் கொள்ளத்தக்கனவாகிய அளவினவே, கண்டத்தின்கண் அணிவன முப்பானிரண்டு மணிகளேயாம். மார்பின்கண் ணணியும் மாலை உந்தியினளவாக விருக்கவேண்டும். (அன்றி) மார்பினளவாக விருத்தலும் உரித்தாமென்க. உயர்ச்சி பொருந்திய மந்திரங்கள் (ஓதி முறையினை, ) கணக்கிடும் (செபமாலை) நூற்றெட்டாம். அதன் பாதியாகிய ஐம்பத்து நான்கும் (செபம் செயற்குத்) தகுதியாம். அதன் பாதியாகிய இருபானைந்தும் (செபம் செய்தற்குத்) தகுதியாம். (செபமணியினை) இம்மூவகையளவையின் ஒன்றாலாக்குக வென்க.

(வி - ம்.) மிடறு - கழுத்து. உரம் - மார்பு. நாபி - உந்தி. மனு -
மந்திரம்.

(24)