| சத்தியோ சாதத் தாட்டிவா மத்தாற் | | றகமதித் தகோரத்தாற் றூபம் | | பத்தியி னளித்துப் பகர்புரு டத்தாற் | | பையவா டையிற்புன லுலர்த்திச் | | சுத்தவீ சான மனுமுத லாகச் | | சொல்லிய பிரமமோ ரைந்தும் | | வைத்திடு மணியொவ் வொன்றற்கு நூறு | | வரிசையி னுரைத்தெடுத் தணிக. |
(இ - ள்.) (இங்ஙனங் கூறிய மணிகளைத் தரிக்குங் காலத்து) சத்தியோசாத மந்திரத்தா லபிடேகஞ் செய்து வாம மந்திரத்தால் (அம்மணிகளைச் சிவமாகக்) கருதி அகோர மந்திரத்தால் நறும்புகையினை (அம்மணியாகிய சிவத்தினுக்கு) அன்புடனளித்து (யாவரும் விரும்பிச் சொல்கின்ற, தற்புருட மந்திரத்தால் மெல்ல திருவொற்றாடையால் (அபிடேகஞ் செய்த நீரினை) ஏற்றுதல் செய்து சுத்தமாகிய ஈசான முதலிய பஞ்சப்பிரம மந்திரங்களால் (அம்மாலையின் கண்ணுள்ள) மணியொவ்வொன்றினுக்கும் நூறுமுறை செபஞ் செய்து பின்னர் (அம்மாலையினை) எடுத்தணிக என்க. (வி - ம்.) ஆட்டி - கழுவி. தூபம் - மணப்புகை. ஆடை - திருவொற்றாடை. (25) | பரசிவன் பூசை புரையநா யகத்துப் | | பண்பொடு பூசனை புரிந்து | | பரர்விழிப் படாமை மணியொலி யெழாமைப் | | பரனுரு வுளத்திடை யிருத்திப் | | பரவுமந் திரங்க ணாயக மணிமுன் | | பற்றியெண் ணுகமறந் தேனும் | | பரநனி வழங்கு நாயகங் கீழாப் | | பயிலுற வணியல்பார்த் திவனே. |
(இ - ள்.) அரசனே (யாவரினும்) மேலாகிய இறைவனுக்குப் பூசை செய்தலையொப்ப நாயகமணியினை (சிவமாகக் கருதி) பண்பினொடு அருச்சனை செய்து மற்றை மக்கள் விழியிற்படாமலும், அம்மணியினிடத் தொலியுண்டாகாமலும், இறைவன் திருவுருவை உளத்தின் கண்ணே தங்கச்செய்து நாயகமணியை முன்னர்ப்பற்றி மந்திரத்தைப் (பின்னர்க் கூறி,) எண்ணுக. மறந்தாயினும் மேல் உயர்வைக்கொடுக்கும் நாயகமணி கீழுறும்படி அணியாதொழிக என்றார் என்க. (வி - ம்.) புரைய - ஒப்ப. பரர் - பிறர். பரம் - மேன்மை. (26) வேறு | கடல்பருகு மருந்தவத்தான் கருணைசுரந் தினிதளித்த | | கடலமிழ்த நிகரருளைக் கைக்கொண்டு விடைபெற்றுக் |
|