பக்கம் எண் :

916தணிகைப் புராணம்

 போயபவந் தொறுமீட்டும் புகழிகழீண் டுற்றனவோ
 காயமொழிந் திக்குடிக்குக் கரிசுறினீக் குவைகொல்லோ.

(இ - ள்.) தேயம், காலம், பொருளாகிய இவைகள் தனித்தனி வேறாதல்போல வேறாகாது (சேறும் நீரும்போல) பிரிவின்றிப் பொருந்திய மாயா காரியமாகிய இவ்வுடல் (உயிர்க்கு) வேறாக விருக்குமாயின் (நின்னாற் காதலிக்கப்பட்ட) சீதையானவள் (உனது) உயிர்க்கு என்ன பயனைச் செய்வாள். கழிந்த பிறவிகடோறும் நீயிழைத்த புகழும், இகழ்ச்சியும் இப்பிறவியின்கட் பொருந்தினவா? (உனக்கிப்பொழுது கிடைத்துள்ள) உடலானது நீங்கப்பெறின் (நீ பிறந்த இக்குடியினுக்கு) ஒரு குற்றம் பொருந்தின் நீக்குவாயோ வென்க.

(வி - ம்.) தீராமை - வேறாகாது. உடங்கு - ஒருங்கே. மாயை யாலாயவுடல். மங்கை - மனைவி : சீதை. காயம் - உடல். கரிசு - பழி. கொல் : வினாவின்கண் வந்தது.

(33)

 சிற்றிலிழைத் தாடுநர்பாற் செறிந்தாடும் விளையாட்டுப்
 பொற்றமனை யறம்புரிகாற் புந்திசெயி னகைதரல்போல்
 அற்றமிலா வில்லறமென் றாதரிக்கப் படுவதருள்
 பற்றுமிகும் போதுன்னிற் பழுதெனத்தோற் றுவதன்றோ.

(இ - ள்.) (யாம்) சிற்றிலிழைத்தாடும் சிறார்மாட்டுப் பொருந்தி ஆடல் செய்யும் விளையாட்டானது அழகிய இல்லறத்தினை நடாத்துகின்ற காலத்து நினைப்பின் நகுதலைத் தருதல்போலச் சோர்விலவாகிய இல்லறமென்று விரும்பப்படுவதானது (இறைவன் றிருவருளின்கட்) பற்றானது அதிகரிக்குங் காலத்து (அதனை) நினைப்பின் (அது) குற்றமாகத் தோன்றுவதாகும் என்க.

பொற்ற - அழகிய. அற்றம் - சோர்வு. உன்னல் - நினைத்தல்.

(34)

 மங்கையுரை யானுந்தை மரணமடைந் ததுமீண்டை
 மங்கையொழி வாலொருநீ வருந்துவதுங் காட்சியவே
 மங்கையராற் றுயர்பெரிதும் வளருமெனு முரைச்சான்று
 மங்கையரை வேறெடுத்து வகுத்துரைக்க வேண்டுமோ.

(இ - ள்.) பெண்களாற்றுன்பம் பெரிதுளவாகுமென்று கூறுகின்ற ஆகமவளவைக்கு (நின் சிற்றன்னையும், நின் மனையாளுமல்லாமல்) வேறு பெண்களைக் கரியாக வகுத்துச் சொல்ல வேண்டுமோ? வேண்டுவதின்று. அவரே கரியாவர். (நினது) சிற்றன்னையாகிய கைகேயியின் வார்த்தையால் (உன்) தந்தையாகிய தசரதன் மடிந்ததும் இவண் (நின் மனையாளாகிய சானகியின்) நீக்கத்தால் ஒப்பற்ற நீ வருத்தமுறுவதும் கண்கூடேயாம் என்க.

(வி - ம்.) உரை - ஆகம அளவை. சான்று - கரி. காட்சி -
காண்ட லளவை.

(35)