(வி - ம்.) வழிநாள் - மறுநாள். தொன்று - முற்காலம். சூழல் - வீராட்டகாசம். நன்று - பெரிது. மன்றல் - நறுமணம். பதி - ஊர்; அயோத்தி. (44) | எற்றுபுன லயோத்திநக ரிராமனருள் பெற்றபடி | | பற்றறுத்த வுயர்தவத்தீர் பகர்ந்தனமா லினிச் செவ்வேள் | | கற்றைநறுஞ் சுருட்கூந்தற் கானவர்தங் குலவிளக்கை | | முற்றிமறை யொழுக்கனைத்து முடித்துடன்போந் ததுமொழிவாம். |
(இ - ள்.) எல்லாப் பற்றினையு மறுத்தல் செய்த உயர்ந்த தவத்தினை யுடைய முனிவர்களே! கரையினை மோதுகின்ற புனலோடு கூடிய அயோத்தி நகரின்கண்ணுள்ள இராமனருள் பெற்ற முறையினைச் சொற்றனம். இனி முருகப்பெருமான் நல்ல கடை குழன்ற கூந்தலினையுடைய வேடர்குலம் விளங்குதற்கு விளக்குப்போல்பவளாகிய வள்ளிநாயகியாரை அடைந்து மறையொழுக்க மெல்லாவற்றையும் முடித்தல் செய்து உடன் சென்றதை மொழிவாமென்க. (வி - ம்.) இனி, மறையொழுக்கு - களவொழுக்கம் எனவும், உடன் போந்தது - அவளுடன் சேறலெனவும் பொருள் கூறுவர். (45) இராமன் அருள்பெறு படலம் முற்றிற்று. ஆகச் செய்யுள் 2130 |