| செய்யும்பொருட்டு, பொன்னகர்க் கிறைவனாகிய இந்திரன் செலுத்தப் புணர்ந்து மின்னலை வெளியிட்டு மேகங்கள் முழங்குவன வென்க. (வி - ம்.) புணர்ந்தென - புணர்ந்து : எச்சத்திரிபு. தளிப்பது - வளம்பெறல். இறை - இந்திரன். (19) | | ஒழுகு வெள்ளரு வித்திர ளோதையும் | | | விழும மார்வெறி யாட்டய ரோதையும் | | | தழுவு மவ்வரை தையனற் செவ்வியள் | | | குழும வாவெனக் கூவுவ தொத்ததே. |
(இ - ள்.) இழிகின்ற வெள்ளிய அருவியின் ஓதையும், சிறப்புப் பொருந்திய வெறியாட்டினைச் செய்யுமிடத்துளவாம் ஓசையும் பொருந்துகின்ற அம்மலையினது அழகினையுடைய வள்ளியம்மையார் நல்ல பருவத்தினையுடையாள் (அவளை) கூட வருவாய் என அழைத்தலை ஒத்ததென்க. (வி - ம்.) ஓதை - ஒலி. விழுமம் - சிறப்பு. தையல் - வள்ளி. குழும - கூடுதற்கு. கூவுதல் - அழைத்தல். (20) | | ஏந்த னின்வர வேற்றுநின் சென்னியில் | | | வேய்ந்து கொள்ள விழைந்தன போன்மெனக் | | | காந்த ளுஞ்சுனைக் காவியு மௌவலும் | | | பூந்தண் பிண்டியும் போதுக டாங்கின. |
(இ - ள்.) தலைவனே நின்னை வரவேற்று நினது முடியில் அணிந்து கோடற்கு விழைவுற்றன போலுமென்று சொல்லக்காந்தட் செடிகளும் நீர்ச்சுனையின்கண்ணுள்ள உற்பலக் கொடிகளும், முல்லைக்கொடிகளும் பொலிவோடு குளிர்ந்த அசோக மரங்களும் மலரும் பருவத் தரும்புகளைத் தாங்கி நின்றன பொழில்களென்க. (வி - ம்.) பொழில்கள் - தோன்றா எழுவாய். போன்ம் என : மகரக்குறுக்கம். போது - மலரும் பருவத்தரும்பு. மௌவல் - முல்லை. (21) | | கள்ளு றைத்துக் கடிமலர்த் தாதுறீஇ | | | வள்ளி தழ்த்திரள் வாலொளி நீளறை | | | கொள்ள வுய்த்துக் குமரநீ யாட்டயர் | | | பள்ளி யெங்கும் படுப்பன பைம்பொழில். |
(இ - ள்.) அப்பசிய சோலைகள் தேனைத்துளித்தல் செய்து மணம் பொருந்திய மலர்ப்பொடிகளை உறும்வண்ணம் செய்து வளப்பமுள்ள மலரிதழின் திரள்களை வெள்ளிய ஒளியைத் தன்னிடத்துடைய நீண்ட பாறைகள் (தன்னிடம்) கொள்ளச்சேர்ந்து (முருகப்பெருமானே) நீ விளையாடுகின்ற படுக்கையை யாங்கணும் விரிப்பனவென்க. (வி - ம்.) அறை - பாறை. படுப்பன - விரிப்பன. (22) |