பக்கம் எண் :

930தணிகைப் புராணம்

(இ - ள்.) இடமிடங்கடோறும் மிகுதியாகிய எல்லா வளங்களும் பொருந்துகின்றன. (ஆன்மாக்கள்) கருதுகின்ற (இருதுக்களாகிய) தம் பயன்களைக் கையகப்படுக்கும் காலமென்று கருதி இருதுகள் வேறுபாடின்றி யொருசேர அவண் பொருந்துகின்றன போன்றனவென்க.

(வி - ம்.) ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொருவளம் உளதாதல் இயல்பு. இம்மலையின்கண் எவ்வளமும் எக்காலத்துமுளவா மென்பார் "இருது வேற்றுமையின்றி யொருங்கவண்" மருவுகின்றன போன்ற என்றார். வயின்றொறும் - இடங்கடோறும்.

(29)

 அங்க ணீமுன் னருளிய வாறுபோய்
 நங்கை சுந்தரி நற்றவ வேடர்பால்
 தங்கி யேனலந் தாழ்குரல் காத்துறும்
 எங்கு மற்றவ ளுக்கிணை யில்லையே.

(இ - ள்.) அம்மலையின்கண் அடிகள் முன்னர் (சரவணப் பொய் கையில்) அருளிச்செய்த வண்ணஞ் சென்று சுந்தரியாகிய நங்கை நல்ல தவத்தினையுடைய வேடரிடத்துத் தங்குதல் செய்து தினைப்புனத்தின் கண்ணுள்ள விளைந்து பின்னர்த் தாழ்ந்த தினைக்கதிர்களைக் காத்தலுறுவாள் எவ்வுலகத்தினும் அவளுக்கு ஒப்பான மாதர்கள் இல்லையென்க.

(வி - ம்.) அங்கண் - வள்ளிமலையாகிய அவ்விடம்.

(30)

 நினக்கு நேரழ குள்ளவ ரில்லவள்
 தனக்கு நேரழ குள்ளவர் தாமில்லை
 மனக்கு வேட்டபொ "தவை வாய்த்தலின்
 இனிக்க முற்றுவ தெங்கணு மில்லையே.

(இ - ள்.) (ஆடவர் குழுவில் வைத்து) அடிகளுக்கு ஒப்பாகிய வனப்புள்ளவர் இல்லையென்க. (பெண் மக்கள் குழுவினுள்) அவ்வள்ளி நாயகியார் தமக்கு ஒப்பான வனப்புள்ளவரில்லை யென்க. (ஆதலால்) மனத்தால் விரும்பிய பொருள்கள் (அவ்விரும்பிய) காலத்தே வாய்க்கப் பெறுதலைப் பார்க்கிலும் இனித்தலைச் செய்ய அடையும் பொருள் எவ்விடத்தினும் இல்லையென்க.

(வி - ம்.) மனதால் விரும்பிய பொருள்களை விரும்பியகாலத்தே அடையும் இன்பினைக் காட்டிலும் வேறின்பமில்லை யென்க. வேட்ட : அன் சாரியை கெட்ட முற்றுவினைப் பெயர். பொழுது - காலம். அவை -
அப்பொருள்கள்.

(31)

வேறு

 புருவம்வார் செவிகண் கவுள்பணைத் தோள்கை
           புணர்முலை கவான்முத லுறுப்பும்
 பொருவுமொன் றனையொன் றலதுவே றொவ்வா
           பூங்குழல் வாணுத னாசி