| | பிடிநெடு நாசி பிறைமுகத் திரும்பு | | | பெருகொளி வாணுதல் புண்டோய் | | | வடிநுதி செந்தூ ளட்டுவார் கூந்தல் | | | வகிர்ந்தகீற் றாகமூன் றுறுப்பும் | | | கடிமலர்ப் பகழிக் கழைச்சிலைத் தடக்கைக் | | | காமவேள் காரிரு ளோதித் | | | துடியடிக் கயவாய் முறஞ்செவி வேழந் | | | தூண்டுகைத் தோட்டிபோன் றனவே. |
(இ - ள்.) (வள்ளியம்மையார்) நீண்ட மூக்கு (காரிருளோதி யாகிய தன் யானையை மாரன் செலுத்துகின்ற தோட்டியின்) காம்பாகப் பிறைவடிவைத் தன்னகத்தேயுடைய இரும்பு மிக்க ஒளியினையுடைய (அம்மையார்) வாள்போன்ற நுதலாக (யானை மத்தகத்தின் கண்ணுள்ள) புண்ணிற்றோய்வுற்ற கூர்மையோடு கூடியநுனி, சாதிலிங்கத் தூளினை அள்ளியிட்டுள்ள குழலினை வகிர்தல் செய்த பிளவாக மூன்றுறுப்பினையும் நறுமணமுள்ள மலராகிய கணையையும் கரும்பாகிய வில்லினையுமுடைய பெருமை பொருந்திய கையுடன் கூடிய காம வேளானவன் கரிய இருளோதியாகிய துடியினை யொத்த வடியினையும் ஆழமாகிய வாயினையும், சுளகுபோன்ற காதினையுமுடைய யானையைச் செலுத்துகின்றதை யொத்திருந்தன வென்க. (வி - ம்.) யானைத்தோட்டியின் பிடிநாசி தோட்டியின் அங்கமாகிய பிறைபோல் வளைந்த இரும்புநுதல் : அஃதாவது நெற்றியின் வளைவு. புண்ணிற்றோய்ந்தநுதி உச்சியினுள்ள சாதிலிங்கப் பொடியிட்டுள்ள கூந்தலின் வகிர்ந்தபாகம். இதனை இக்காலத்துச் சிவ கிர்தல் என்பர். மன்மதன் யானை இருள். முதற் செய்யுளில் அம்மையார் கூந்தலை ஆணவமல இருளாக உருவகஞ் செய்தார். இத்திருப்பாட்டில் அக்கூந்தலிருளாகிய யானையைச் செலுத்தற்குரிய கருவி கூறினார். யானை மத்தகத்துள்ள புண்ணில் அங்குசநுனி தோய்ந்து "செந்நிறமுற்றிருத்தல்போல சாதிலிங்கத் திலகமிட்டுள்ள தென்பது தோன்ற செந்தூளாட்டுவார் கூந்தல்" என்றார். நாசி, நுதல், கூந்தல் வகிர்ந்த கீற்றாகிய மூன்றுறுப்பும் தோட்டி போன்ற வென்க. (34) | | மாப்பெருஞ் சூரை வென்றிடு நின்னை | | | வணக்கவார் செவியளிக் குவளை | | | ஏப்புழை படுத்த திக்குழ னாணி | | | லிருபெரும் புருவவில் சிலையில் | | | கோப்பமை யாத கூரெதி ராத | | | கொழுங்களி விழிக்கணை யமைத்துத் | | | தீப்படு மதவேள் கவிகைநின் றனைய | | | திருவெழி லுடையது முகமே. |
(இ - ள்.) (அம்மையார்) திருமுகம் மிகப் பெரிய சூரனை வென்ற அடிகளை வணங்கச் செய்ய நீண்ட செவிகளில் வண்டு |