| மொய்க்கும் குவளை மலராகிய ஏப்புழையைத் தன்னகப் படுத்ததாகி (வண்டினங்களாகிய நாணினைத் தன்னுட்கொண்டதாகிய) கரும்பு வில்லும் (இத்தன்மை நமக்கிலவென்று) உழலுதற் கேதுவாகிய நாண்கயிறிலவாகிய இரண்டு பெரிய புருவமாகிய வில். வில்லிற் பூட்டுதலமையாத (சாணை முதலியவைகளிற்) கூர்மை செய்யாத கொழுவிய களிம்பினையுடைய விழியாகிய கணைகளைத் தன்னுள் அமையச் செய்து இறைவன் விழியாற்பட்ட மாரவேளின் சந்திரவட் டக்குடையானது நின்றாலொத்த திருவெழிலையுடையதென்க. (வி - ம்.) முகம் செவியிற் குவளையாகிய ஏப்புழையைப்படுத்ததாகிப் புருவவில்லையு மமைத்துக்கொண்டு கவிகை நின்றனைய எழிலுடையதென்க. அளிநாணுடைய மாரன் கரும்புவில் நாணிலவாகிய அம்மையார் புருவவிற்போற் கோறற்றொழில் செய்ய இயலாமையான் "இக்குழனாணிலிருபெரும் புருவவில்" என்றார். உலகின்கண்ணுள்ள கணைகள் வில்லிற் கோக்கப் பெற்றும் உள்ளன. அம்மையார் திருவிழியாகிய கணைகட்கு அச் செயலிலவென்பார். "சிலையிற் கோப்பமையாத கூரெதிராத கொழுங்களி விழிக்கணை" யென்றார். ஏப்புழை - பகைவர் மேற் கணை செலுத்தும் பொருட்டு மதிலினுள்ளிடத் தகற்சியாயும் புறத்தே சிறிதாயும் மிருக்கும் வண்ணம் செய்துள்ளவிடம். இதனால் பண்டைக் காலத்துப் பெண் மக்கள் செவியில் நீலமலர் செருகியிருந்தமை நன்கு விளங்கும். (35) | | வார்ந்தபைங் கூந்தற் சைவலஞ் செவிமென் | | | வள்ளைகட் குவளைவாய்க் குமுதம் | | | ஈர்ந்துகட் கமலந் தழைக்குநீர் நிலையி | | | னிருந்தன கவுட்டுணை பலவீ | | | ஆர்ந்தொரு கோளி காஞ்சியி னின்றாங் | | | கைதுவே றினமலர் பலவும் | | | சார்ந்தலர் கமுகா யமிழ்தமும் பொதிந்து | | | தழைந்தது மங்கல மிடறு. |
(இ - ள்.) ஒழுகிய கூந்தலாகிய பாசியும், செவியாகிய மென்மை பொருந்திய வள்ளையும், கண்ணாகிய குவளையும் வாயாகிய செவ்வல்லியும், குளிர்ச்சியுடைமையால் தேனினையுடைய தாமரை தழைத்தல் செய்யும் நீர் தங்குமிடத்தினைப் போல இருகன்னங்களுமிருந்தன. பல மலர்களைப் பொருந்திக் காயாத மரமொன்று காஞ்சிமா நகரத்தின் கண் நின்றதையொப்ப அழகிய வேறு வேறான நீர்ப்பூப் பலவும் பொருந்தல் செய்து விரிகின்ற கமுகமரமாகி அமிழ்தத்தினையும் தன்னுட்கொண்டு என்றும் மங்கலத்தைத் தருகின்ற கண்டந் தழைவுற்றதென்க. (வி - ம்.) இருகன்னங்களும் நீர் நிலைபோல் இருந்தனவென்க. சைவலமும், வள்ளையும், குவளையும், குமுதமும் கமலமும் உளவாதற் கேதுவாகிய நீர்நிலை யென்க. கூந்தல், செவி, கண், வாய், முகம் இவைகட்குவமை மேற் கூறிய பொருள்கள். இப்பொருள்கள் தழைத்தற் கேதுவான நீர்நிலை போலக் கன்னங்களிருந்தன வென்க. இருகன்னங்களுக்கும் நீர்நிலை உவமானமென்க. ஈர்ந்து - குளிர்த |