| லால் தழைக்கு நீர்நிலை யென்க. காஞ்சியிற் காயாத மரமொன்று பல பூக்களுந் தன்பாற் பொருந்த நின்றாற்போல கண்டமாகிய கமுகு கண்காது முதலிய உறுப்பாகிய மலர்கள் செறியப்பெற்று அமிழ்தினையுந் தன்னகத் தடக்கித் தழைவுற்றதென்க. மிடற்றினுக்குவமைப் பொருள் கமுகு. கோளி மரமொன்று காஞ்சியிற் பல மலரையும் தாங்கி நின்றாற் போல கண்டமாகிய கமுகும் பல மலரையும் தாங்கி நின்ற வென்பார். "ஐதுவேறின மலர் பலவும் சார்ந்தலர் கமுகா யமிழ்தமும் பொதிந்து தழைத்தது மங்கலமிடறு" என்றார். (36) | | கந்தரக் கமுகென் றுரைத்திடும் புல்லுக் | | | கடிமலர் பலமலர்ந் ததுகண் | | | டுந்தெழில் வேயென் றுரைத்தகு புல்லு | | | மொளிர்ந்தசெங் குடங்கைமென் கமலம் | | | சுந்தர விரலுற் பலமுகிழ் காட்டிச் | | | சுரர்துதி பாடலங் காஞ்சி | | | அந்தினின் றதனை நிகர்த்தன மாமென் | | | றடுத்திருந் தனபொரும் பணைத்தோள். |
(இ - ள்.) கழுத்தாகிய கமுகென்று சொல்லும் புறக்காழையுடைய மரம் மணமுள்ள பல மலர்கள் மலரச் செய்திருத்தலை யறிந்து அழகினை வெளியிடுகின்ற புறக்காழையுடைய புகழத் தக்க மூங்கிலாகிய மரமும் ஒளி பொருந்திய சிவந்த அகங்கையாகிய மெல்லிய தாமரையும், அழகிய விரலாகிய அரும்பினை வெளியிட்டுத் தேவர்கள் துதியா நின்ற பாதிரி மரமானது காஞ்சியாகிய அவ்விடத்து நின்றதனை யொத்துப் (புறக்காழையுடைய கழுத்தாகிய கமுகினுக்கு புறக்காழையுடைய மூங்கிலாகிய தானும்) இனமாகுமென்று ஒப்பிலவாகிய மூங்கிலாகிய தோள் ஒத்திருந்தன வென்க. (வி - ம்.) கழுத்தாகிய கமுகு பல மலரை வெளியிட்டுள்ளதனைக் கருதித் தோளாகிய மூங்கிலும் அகங்கையாகிய தாமரையையும், விரல்களாகிய நீலோற்பல மலர்களையும் வெளியிட்டுத் தேவர் போற்றும் பாதிரி மரம் காஞ்சி நின்றதனையொத்துப் புறக்காழையுடைய கண்டமாகிய கமுகினுக்கு புறக்காழையுடைய தோளென்னும் மூங்கிலாகியதானும் இனமாகுமென்று பொருந்தியிருந்தன வென்க. "புறக்காழனவே புல்லென மொழிப" என்னுந் தொல்காப்பியத் தானறிக. அந்தில் - அவ்விடம். (37) | | கொடிற்றுநீர் நிலைகண் டடுத்தன வுரத்துக் | | | குருகுகுன் றாதிய வுருவாப் | | | பொடித்திட லானுஞ் சூரனா நேமிப் | | | புள்ளுருப் பலகொள லானும் | | | படித்தலை யிரண்டு மொக்குநீள் சிறைய | | | பகைக்குரு குருத்தப வுருவே |
|