பக்கம் எண் :

களவுப் படலம்935

 றெடுத்தழிந் ததுநிற் புணர்குரு கிருந்தாங்
           கெனைத்துமாய் மன்னிநிற் பனவே.

(இ - ள்.) கன்னங்களாகிய நீர்நிலையினை யறிந்து பொருந்தியனவாகிய (அம்மையார்) திருமார்பின்கண்ணுள்ள தனங்களாகிய சக்கரவாகப் பறவை மலை செப்பு முதலிய வடிவாகத் தோன்றலானும், சூரனாகிய சக்கரவாகப் பறவை மலை முதலிய பல வடிவினைக் கோடலானும் (அம்மையார் உரத்தின்கண்ணுள்ள தனமாகிய சக்கர வாகமும் சூரனாகிய சக்கரவாகமுமாகிய) இவ்விரண்டும் பூமியினிடத்துச் செயலானொத்திருக்கும். நீண்ட சிறையினையுடைய (அடிகளுக்குப்) பகையாகிய சக்கரவாகம் (தானெடுத்த மலை முதலிய) வடிவங்கள் கெடுதல் செய்ய வேறு வடிவெடுத்து அழிவுற்றது. (அடிகளைப்) பொருந்துவதாகிய சக்கரவாகம் இருந்தாங்கேயிருந்து (உவமையாகிய) எல்லாப் பொருளுமாகப் பொருந்தி நிற்பன வென்க.

(வி - ம்.) கன்னமாகிய நீர்நிலையை யடுத்த (அம்மையார்) தனங்களாகிய சக்கரவாகம் இருந்தாங்கேயிருந்து எல்லா உவமைப் பொருளுமாகத் தோன்றின வென்பார். "உரத்துக் குருகு குன்றாதிய வுருவாப் பொடித்திடலானு" மென்றார். கொடியுறு - கன்னம். கன்னத்தினை நீர்நிலையாக உருவகஞ் செய்தார். இறைவன் சூரனோடு போர்புரிய வாற்றாது சக்கரவாக முதலிய பல வுருவெடுத்து ஒவ்வொரு வடிவுகெட வேறு வடிவெடுத்தலால் "பகைக் குருகுருத்தபவுருவே, றெடுத்தழிந்தது" என்றார். வேறுருக்கோடலின் தரையின்கண் இவ்விரு பறவையு மொக்கும் என்க. பகைக்குருகு - சூரன். நிற்புணர் குருகு - தனம். தப - கெட. பொடித்தல் - தோன்றுதல்.

(38)

 கருங்குழன் மேக மீழவண் டொடையற்
           கணத்தினான் மின்னியஞ் சிறைய
 சுரும்பினாற் சிலம்பி மலர்மதுத் தாரை
           சொரிதலி னுயங்குபு சாய்ந்த
 மருங்குலஞ் சீயஞ் சரண்சர ணென்னா
           மருவவஞ் சலையென நெடுமால்
 ஒருங்கிரு குன்றம் பெயர்த்துநின் றதுபோ
           லொழுகிய துரோமமா வல்லி.

(இ - ள்.) (அம்மையார்) கரிய கூந்தலாகிய மேகம் பொன்னாலாகிய வளப்பம் பொருந்திய பொற்கயிற்றான் மின்னுதல் செய்து அழகிய சிறையினையுடைய வண்டின் கூட்டங்களால் ஒலித்து (தனங்களிலணிந்துள்ள) மலர்த்தேனாகிய மழையைச் சொரிதலான் வருத்தமுற்றுக் குறைந்த மருங்குலாகிய சிங்கம் அடைக்கலப்பொருள் அடைக்கலப் பொருள், என்று பொருந்த (நீ) அச்சங்கொள்ளற்க என்று விண்டுவானவன் ஒருசேர இரண்டு குன்றங்களைப் பெயர்த்துக் (குடையாகப் பிடித்தல் செய்து) நின்றதனை யொக்க மயிரொழுக்கானது நேர்
நின்றதென்க.