பக்கம் எண் :

936தணிகைப் புராணம்

(வி - ம்.) உந்திமேற்போய உரோமா வல்லியானது திருமால் ஒரு சேர இரண்டு குன்றினைப் பெயர்த்து நின்றதனைப் போன்றதென்க. இருகுன்றம் - ஈண்(டம்மையார்) தனமென்க. ஈழம் - பொன். தொடையல் - கயிறு.

(39)

 கூந்தல்கா னெனக்கண் ணுழைக்குறி காட்டக்
           கொங்கைவெற் பெனப்புயம் வேயின்
 வாய்ந்தன வுந்தி வலம்புரி காட்டு
           மணிக்கட லெனப்புடை பணிந்த
 ஏந்தக லல்குன் மயிரொழுக் கெனுமா
           லினிதுகண் படுக்குநெட் டமளி
 போந்தடுத் தெழினி யுள்ளுறப் பைத்துப்
           பொற்பவீற் றிருந்தது தகையும்.

(இ - ள்.) (அம்மையார்) திருக்குழல் (தான்) கானெனத்தோற்றத் திருக்கண்கள் (தாங்கள்) மானென்னும் அறிகுறியை வெளியிட, கொங்கைகளானவை (தாங்கள்) வெற்பென்று சொல்ல, (அம்மையார்) திருத்தோள்கள் மூங்கிலினைப்போன்று பொருந்தின. கொப்பூழாகிய வலம்புரியை வெளிக்காட்டுகின்ற கரியகடலென்று சொல்ல, பக்கந்தாழ்ந்த அல்குலானது தகையும் (அவ்வல்குலாகிய கடலுள்) மயிரொழுக்கென்னுந் திருமால் இனிது துயில்கொள்ளும் நீண்ட படுக்கையாகிய சேடன் வந்து பொருந்தி மேகலையாகிய திரைச்சீலையை யுள்ளே பொருந்த விரித்து அழகு பொருந்த வேறொருவர்க்கில்லாத சிறப்புடனிருந்ததைத் தகையுமென்க.

(வி - ம்.) மணிக்கடலென வல்குல் தகையுமெனவும் அமளி பொற்பா வீற்றிருந்தது தகையுமெனவும் கூட்டுக. ஆதிசேடனே அல்குலாக வந்தனனென்பார் "மயிரொழுக்கெனு மாலினிதுகண்படுக்கு நெட்டமளி" என்றார். அமளி - படுக்கை; ஈண்டு ஆதிசேடன். கொங்கையை வெற்பெனக் கூறியதற்கேற்ப "புயவேயின் வாய்ந்தன" என்றார். வெற்பினோடு வேயினுக்குளதாகிய இயைபினையும் அறிக. ஆதிசேடன் வீற்றிருந்ததை அல்குல் தகையுமென்க. எழினி - சேலை முதலிய திரையென்க.

(40)

 ஆர்ந்தபன் மணிக்காழ் விரிசிகை பரும
           மலங்கொளிக் கலாபமே கலைமின்
 கூர்ந்தொளி துளும்புங் காஞ்சியென் றுரைக்குங்
           கோலமா ரெழினிகால் வாங்கும்
 சேர்ந்துவார்ந் தொழுகிப் போந்தொறுஞ் சிறுகிச்
           செறிந்தடாப் பூணிடைக் கொண்டேர்
 சார்ந்தபொற் றூணம் போன்றன மகர
           வாயணி தயங்கிய குறங்கு.

(இ - ள்.) பல மணிகளார்ந்த காழென்னும் எண்மணிக் கோவையும், முப்பானிரண்டு மணிக்கோவையாகிய விரிசிகையும்; மூவாறு