பக்கம் எண் :

களவுப் படலம்937

கோவையாகிய பருமமும், பதினாறு கோவையாகிய கலாபமும், ஏழு கோவையாகிய மேகலையும், ஒளி மிகுந்து விளங்குகின்ற எண்கோவையாகிய காஞ்சியும் ஆகிய அழகு பொருந்திய திரைச்சேலைகளால் வளைக்கப்பெற்றுத் திரண்டு நீண்டு நேராகச் செல்லுந்தோறும் சிறுத்துச் செறிந்து பொருந்தாத அணிகலங்களைத் தன்பாற்கொண்டு வனப்பெல்லாம் பெற்றுப் பொருந்திய பொன்னாலாகிய தூண்களை யொத்திருந்தன குறங்கு செறியென்னும் அணிகலம் விளங்கிய துடைகளென்க.

(வி - ம்.) காழ் - எண் கோவையையுடையது. விரிசிகை முப்பானிரண்டு கோவையுடையது. பருமம் பதினெண் கோவையுடையது. கலாபம் பதினாறு கோவையுடையது. மேகலை ஏழு கோவையுடையது. காஞ்சி எண்கோவையுடையது. எழினி - திரைச்சேலை. கால்வாங்கல் - வளைத்தல் : சுற்றுதல். சேர்ந்து - திரட்சியுற்று. இதனைச் " சேரே திரட்சி" என்னுந்தொல் - சொல் - உரி - சூத்திரத்தானறிக. வார்தல் - நீளல்; இதனை, "வார்தல் போகலொழுகன் மூன்றும், நேர்தலும் நெடுமையும் செய்யும் பொருள" என்னுந்தொல் - சொல் - உரி - சூத்திரத்தானறிக. பறவாக்குளவி, பாயாவேங்கை என்பன காட்டு மல்லிகையையும் வேங்கை மரத்தினையு முணர்த்தினாற்போல "செறிந்தடாப் பூணினைக் கொண்டு" என்றதனால் அணிகலமில தென்பதனை விளக்கிநின்றது. அடாப்பூண் - இல்லாதபூண் - இல்லாதபூணைக் கொண்டெனவே பூணிலதென்பது. எழினி - (ஈண்டுதுடையாகிய தூணத்திற்கிடும்) உறை. மகரவாய் - குரங்கு செறியென்னும் அணி. சேலை கலையாமல் துடை மேல் அணியப்படுவது. தூணென்றதற்கேற்ப மகரவாயைப்பூ ணென்றார். "செறிசுடர்ப் பூண்" என்பதும் பாடம்.

(41)

 மதர்விழி நீலந் திருமுகக் கமலம்
           வயங்கிய மூரலந் தளவம்
 பிதிரொளி யுருவத் தியற்றளிர்ச் செயலை
           பெருவனப் பங்கைமாந் தளிரென்
 றதிர்திறற் காம வாளிகள் வாங்கு
           மாவநா ழிகைபொருஞ் சிலம்பு
 கதிருகு பொன்னங் கிண்கிணி பாத
           சாலமுங் கவைஇய கணைக்கால்.

(இ - ள்.) சிலம்பென்னும் காலணியும், ஒளியைச் சிந்துகின்ற பொன்னாலாகிய கிண்கிணியும், பாதசாலமுமாகிய அணிகலங்களைப் பொருந்திய கணைக்கால்கள். மதர்த்த கண்களாகிய நீலமும், திருமுகமாகிய தாமரையும், விளங்குகின்ற பல்லாகிய முல்லையும் ஒளியினை வெளியிடுகின்ற (அம்மையார்) வடிவத்தின் இலக்கணங்களைத் தன்பாற் கொண்ட தளிர்களையுடைய அசோகும், மிக்க வனப்பையுடைய அழகிய கையாகிய மாந்தளிரும், என்று சொல்லும் அதிரத்தக்கவலியினையுடைய மன்மத பாணங்களைத் தன்னுட்கொள்ளும் அம்புக்கூட்டினை யொக்குமென்க.

(வி - ம்.) ஆவநாழிகை - அம்புக்கூடு. மன்மதன் கணைகள் அம்மையார் அவயவங்களும் உடனிறமாயும் அமைதலின் அவைகளைத்