| தாங்கியுள்ள காலினை "அதிர்திறற்காமவாளிகள் தாங்குமாவ நாழிகை" என்றார். நீலம், கமலம், முல்லை, அசோகு, மா இவைகள் அவன் கணையென்க. (42) | | திருமுகங் கமல மிணைவிழி கமலஞ் | | | செய்யவாய் கமலநித் திலந்தாழ் | | | வருமுலை கமலந் துணைக்கரங் கமலம் | | | வலம்புரி யுந்திபொற் கமலம் | | | பெருகிய வல்குன் மணித்தடங் கமலம் | | | பிடிநடைத் தாள்களுங் கமலம் | | | உருவவட் கவ்வா றாதலி னன்றே | | | யுயர்ந்தது பூவினுட் கமலம். |
(இ - ள்.) (அம்மையார்) திருமுகமும், தாமரை இரண்டு விழிகளுந் தாமரை, சிவந்த திருவாயுந்தாமரை, முத்துமாலை தங்கப் பெற்று வளருகின்ற தனங்களும் தாமரை, இரண்டாகிய கைகளுந்தாமரை, வலஞ்சுற்றியுள்ள கொப்பூழும் அழகியதாமரை, பெருத்த அல்குலாகிய அழகிய தடங்களும் தாமரை, பிடியானையின் நடையினையுடைய பாதங்களுந் தாமரை வடிவம். (அம்மையாகிய) அவளுக்கு இவ்வண்ணம் யாவும் தாமரையாகப் பொருந்துதலினால் அல்லவா உலகின் கண்ணுள்ள மலர்களுள் வைத்துத் தாமரையானது உயர்ச்சியுற்றது என்க. (வி - ம்.) தாமரை ஈண்டு ஆகுபெயராய் மலரை யுணர்த்தி நின்ற தென்க. அம்மையார் உறுப்புக்களாகத் தாமரை மலர் அமைதலை நோக்கி "உருவவட் கவ்வாறாதலினன்றே உயர்ந்தது பூவினுட்கமலம்" என்றார். பூவினுட்கமலம் உயர்ந்ததென்பதனை "பூவெனப்படுவது பொறிவாழ்பூவே" என்னும் நால்வர் நான்மணிமாலையானறிக. (43) | | படைவிழி நேர்ந்த நீலமு முகநேர் | | | பதுமமு மூரனேர் தளவும் | | | புடையொளி கஞற்று மேனிநே ரசோகும் | | | பொன்னடித் துணைபொரு மாவும் | | | தடைஇய பணைத்தோள் புரைகழைக் கரும்புந் | | | தடக்கையிற் பிடித்தலி னன்றே | | | மிடையுமூ வுலகி னுயிர்க்கெலாங் காமம் | | | விளைப்பவ னாயினன் மதவேள். |
(இ - ள்.) வேற்படையாகிய (அம்மையார்) விழியினையொத்த நீலமும், திருமுகத்தினையொத்த தாமரையும், பல்லினையொத்த முல்லையும், பக்கத்தே ஒளியினை வெளியிடுகின்ற மேனியை யொத்த அசோகும், பொன்னிறத்தை யொக்கும் அடித்துணைகளை யொக்கும் மாவும் பெருமை பொருந்திய தோள்களை யொத்த கரும்பும் (தனக்குப்படைகளாகக்) கையாற் பிடிக்கும் காரணத்தினால் அல்லவா மார |