| யிருந்தன. (அவையாவை யெனின்) கூட்டமாகிய வண்டினங்கள் சூழ்ந்த மணமுள்ள கூந்தலையுடைய அம்மையாரின் விழியினைப்போன்ற (அடிகள்) ஒப்பற்ற திருக்கையின் பொருந்திய வேற்படையும் (அம்மையார்) இளமை பொருந்திய மென்மைத்தன்மையான் மருட்சியுற்ற ஊர்தியாகிய மயிலும் பெரிய குணக்கடலே (படையும் ஊர்தியுமாகிய) இவைகள் நின்பாலில்லையாயின் (அம்மையாரை) அடிகள் பிரிந்திருத்தல் அருமைத்தென்க. (வி - ம்.) தணப்புறினும் என்ற உம்மை விகாரத்தாற்றொக்கது. போலும் - ஒப்பில்போலி "நெருப்பழல் போல்வதும்" என்பதுபோலக் கொள்க. மருட்டல் - மயக்கல். இவ் : பன்மைப் பெயர். அருங்குரைத்து - அருமைத்து : குரை : அசைநிலை. அகற்சி - தணத்தல். (46) | | அத்தகு மயிலைக் கண்டமாத் திரையே | | | யவள்பெருங் கவினுளந் துரப்ப | | | வித்தக விரைய நீமணம் புணர | | | விளம்புவா னெழுந்தவென் விழைவால் | | | முத்திற வுயிர்க்கு முயிரென நின்ற | | | முதன்மையை யென்பது மயர்த்திங் | | | கித்திறங் கிளந்தே னனைத்துநீ யறிதி | | | யெம்பிரா னெழுந்தரு ளென்றான். |
(இ - ள்.) அத்தன்மைத்தாகிய மயிலினை யொக்கும் சாயலினை யுடையாளை (அம்மையாரை)க் கண்டளவின் (அவள்) மிக்க அழகானது என்னுள்ளத்தைச் செலுத்த அறிவு வடிவானவனே ! நீ விரைந்து அவளை மணஞ்செய்யச் சொல்லும்வண்ணம் உளவாகிய எளியேன் ஆசையால் (பிரளயாகலர், விஞ்ஞானகலர், சகலர்) ஆகிய மூவகை யுயிர்களுக்கும் உயிராய் நின்ற தலைமையை யுடையாய் என்பதனையும் மறந்து இவ்வாறு கூறினேன். யாவையுமறிவாய் எமது தலைவனே எழுந்தருள்வாயாக என்றனன். (வி - ம்.) மயில் - வள்ளி. கவின் - அழகு. முத்திறவுயிர் - பிரளயாகலர், விஞ்ஞானகலர், சகலர். (47) | | கேட்டலு மகிழ்ந்திங் கிருவென முனியைக் | | | கிழமையி னிருத்திமுன் புறத்தின் | | | ஈட்டிரும் பொருளின் றுறைகளுங் கற்பி | | | னியற்றுமக் கடியுமண் வழங்கக் | | | காட்டிய குமரன் களவெனு மின்பக் | | | கடற்றுறை வழக்கமு முலகில் | | | நாட்டிய நுதலுங் கருத்தொடுந் தமியே | | | நண்ணினன் வள்ளிமால் விலங்கல். |
(இ - ள்.) கேட்டவளவின் மகிழ்ச்சியுற்று நாரதமுனிவனை ஈண்டு இருப்பாயாகவென வுரிமையி னிருக்கச்செய்து (சீபரிபூரணப் படலத் |