| தில்) முன்னர் புறப்பொருள் காரணமாக இழைத்த பெரிய பொருட்டுறையும், கற்பியல் வழிச்செய்யும் மணமும் உலகத்தின்கண் காட்ட முருகன்களவென்று சொல்லத்தகும் இன்பக் கடற்றுறை வழக்கத்தினையும் உலகத்தின்கண் நாட்டக் கருதுகின்ற திருவுள்ளத்தோடு பெரிய வள்ளிமலையினிடத்துத் தமியாக வெழுந்தருளின னென்க. (வி - ம்.) முன்புறத்தின் ஈட்டிரும் பொருளின்றுறை - முன்னர்ப் புறப்பொருளுக்குரிய முல்லைமாலை முதலியன சூடிப் போர்செய்யுமுறை, கற்புக் காரணமாக- கற்புக் காரணமாகச் செய்யும் மணத்தினையும் உலகத்தில் விளங்கும்படி காட்டிட வென்க. நாட்டிய - நாட்ட எச்சத்திரிபு. நுதலுதல் - கருதுதல். காட்ட. நாட்டக்கருதும் கருத்தொடு வள்ளிமலையை நண்ணின னென்க. (48) வேறு | | மயில்பூ வைகள்கிள் ளைபுறா மடமான் | | | அயலே கவகற் றியகன் புனவாய்ப் | | | பயில்வா ளவைதாம் படரா நடுவான் | | | இயலா தவனெய் தியசெவ் வியினில் |
(இ - ள்.) மயில்களும், நாகணவாய்ப் பறவைகளும், கிளியும், புறாவும், மானுமாகிய இவைகள் தினைப்புனத்தின்பக்கலிற் செல்ல வகற்றி அகன்ற தினைப்புனத்தின்கண் பயில்கின்றவளாகிய வள்ளியம்மையார் அம்மயில் முதலியன வாராததும் இயங்குகின்ற ஞாயிறு நடுவானத்தை யெய்தியதுமாகிய ஒரு செவ்வியினி லென்க. (வி - ம்.) மயில் முதலியன படராச் செவ்வி, ஆதவன் எய்திய செவ்வி எனத் தனித்தனி கூட்டுக. ஆதவன் - ஞாயிறு. (49) | | வெள்ளம் பலவென் னுமினார் குழுவும் | | | உள்ளம் புறமென் னவொருங் கியிடை | | | விள்ளும் பரிசில் விழைபாங் கியுஞ்சூழ் | | | கொள்ளும் படிகூர் பொழினண் ணினளால். |
(இ - ள்.) வெள்ளம் என்று சொல்லத்தக்க பலவாகிய மின்னலை யொத்த பெண்கள் குழுவும், உள்ளமும் உடலும்போல அன்பாலே ஒன்றுபட்டு இடையிலே நீங்குதலிலவாகிய தன்மையையுடைய தோழியுந் தன்னைச் சுற்றிக்கொள்ளும்படி பெரிய சோலையின்கண் நண்ணினளென்க. (வி - ம்.) சாமுத்திரிக இலக்கண நூலிற்கூறிய உடலிலக்கணத்திற் கிலக்கியமாக அமைந்த இப்பெண்கள் உடல்போல உள்ளமுமடங்கி அமைந்தன வென்பார். "உள்ளம்புறமென்ன வொருங்கி" என்றார். அறிவு மாசாரமுங் கொளுத்தி வளர்த்த செவிலியின்மகளாய் உசாத் துணையாகி அசாத்தணிவிப்பவளாதலின் "இடைவிள்ளும் பரிசில் விழைபாங்கி" என்றார் என்க. (50) | | குயிலோ டெதிர்கூ வுதுமென் றுமணி | | | மயிலோ டுமாறா டுதுமென் றும்வரைப் |
|