பக்கம் எண் :

942தணிகைப் புராணம்

 பயினீர்ச் சுனைபாய் குதுமென் றுநெடும்
 கயிறம் மனைகைக் கொளுவா மெனவும்.

(இ - ள்.) (தங்கள் கிளவியொத்த) இசையினையுடைய குயிற் பறவைகளுடன் மாறாகக் கூவுவோமென்றும், அழகிய மயிற்பறவையினுக்கு எதிராக நடனஞ் செய்வோமென்றும், வள்ளிமலையினிடத்துப் பொருந்துகின்ற நீர்ச்சுனையிடத்துப் பாய்தலுற்று நீராடுவோமென்றும் நீண்ட கயிற்றானுளவாகிய ஊசலையும் அம்மனைக் காய்களையும் கைக்கொண்டு (ஆடல்) செய்வாம் எனவும்.

(வி - ம்.) நெடுங்கயிறு - ஈண்டூசல். அம்மனை - அம்மனையாடுங் கருவி.

(51)

 ஒளித்தார் தமைநே டியுமுப் புறனில்
 விளித்தார் தமைநே டியும்வெற் பெதிர்கூஉய்க்
 களித்தார் தருகா தன்மதித் துமிவ்வா
 றளித்தேங் குழலா ரகல்வுற் றனரே.

(இ - ள்.) (தங்களுள் எம்மைக்காணுக வென்று) ஒளித்துள்ளவர்களைத் தேடியும், அப்பக்கத்தில் (தங்களை) அழைத்தவர் தங்களைத் தேடியும், மலையினுக்கெதிராக அழைத்தல் செய்து களிப்புற்றவர் அன்பினை மதித்தல் செய்தும் இவ்வண்ணம் வண்டுகள் தங்கப்பெற்ற தேனோடு கூடிய கூந்தலினையுடைய பெண்கள் (அம்மையாரை விடுத்து) நீங்கின ரென்க.

(வி - ம்.) நேடுதல் - தேடுதல். உப்புறம் - அப்புறம்.

(52)

 பழகுற் றதளிர்ப் பொழிலும் பலநாள்
 விழைவுற் றதவப் பயனும் விரவ
 அழகுக் கழகாக் குமணங் கனையாள்
 சுழல்வண் டலர்கொய் துசுலா வுறுவாள்.

(இ - ள்.) (தான் பலநாள்) பயின்ற தளிரினையுடைய சோலையும் பலகாலம் விரும்பிய தவத்தின் பயனும் வந்து கலத்தலான் (உலகத்தினுள்ள) அழகென்னும் பொருளினுக்கும் அழகைக் கொடுக்கும் தெய்வப் பெண்ணையொத்த அம்மை வண்டுகள் சுற்றுகின்ற மலர்களைக் கொய்து சுற்றுவாளாயின ளென்க.

(வி - ம்.) தளி - துளி. அணங்கனையாள் - வள்ளி. சுலாவுறுதல் - சுற்றித் திரிதல்.

(53)

 மந்தா ரமணங் கமழ்சூ ழலிடை
 நந்தா வொளிநா றுபளிக் கறையில்
 முந்தா டியதோ கையின்மூ ரிநடத்
 தந்தா மரைவாள் விழியாக் கினளே.

(இ - ள்.) மந்தாரமலரின் மணமானது கமழ்கின்ற சூழலின்கண் கெடுதலிலவாகிய ஒளியினை வெளியிடுகின்ற பளிக்குப்பாறையின்கண்