| முற்பட நடனஞ் செய்தலுற்ற மயிலின் பெரிய நடனத்தின்கண் அழகிய தாமரை மலர்போன்ற ஒளியுள்ள விழிகளைச் செலுத்தின ளென்க. (வி - ம்.) நந்தா - கெடாத. பளிக்கறை - பளிங்குப்பாறை. மூரி - பெருமை. (54) வேறு | | நின்ற மாதுமுன் றணிகையங் குன்றநீத் தடுத்த | | | வென்றி வேலவன் விளங்குதன் னுருவினைக் கரந்து | | | குன்ற வாணர்தங் குலத்திறை யெனவுருக் கொண்டு | | | வன்றி யாதிவேட் டையிற்செல்வா னெனமருங் கடுத்தான். |
(இ - ள்.) (இங்ஙனம் மயினடனத்தின் விழிவைத்து) நின்ற அம்மையார் முன்னர்த் தணிகைமலையை நீங்கியடுத்தல் செய்த வென்றியைத் தருகின்ற வேற்படையை யுடையான் விளக்கமுற்ற தன்னியற்கை வடிவை மறைத்து மலைவாணர் குலத்துத் தலைவனெனக் கருதும்வண்ணம் திருவுருக்கொண்டு பன்றி முதலியவைகளை வேட்டையாடச் செல்பவனென்று கருத (அம்மையார்) பக்கலிற் பொருந்தின னென்க. (வி - ம்.) குன்றவாணர் குலத்திறை - வேட்டுவரிறை. வன்றி - பன்றி. (55) | | மாசை வண்கயிற் றிறுக்கிய குஞ்சியும் வார்வில் | | | தேசு லாமலர்ச் செங்கையுந் திருவரைக் கச்சும் | | | ஓசை யங்கழற் றாளுமற் றுருவுமா டவர்க்கும் | | | ஆசை மூட்டுமவ் வேட்டுவ னகத்தொடு கிளப்பான். |
(இ - ள்.) பொன்னாலாகிய வளவிய நாணால் இறுக்கிக் கட்டிய குடுமியும், நீண்ட வில்லின் வனப்புப் பொருந்துகின்ற சிவந்த கையும் அழகிய அரையிற் கட்டிய கச்சும், ஒலியோடுகூடிய அழகிய வீரக்கழலினையுடைய திருவடிகளும், ஏனைய வனப்புக்களும் ஆண்மக்களுக்கும் (தாம் பெண் வடிவுகொள்ள) ஆசையை யுளவாக்கும் அவ்வேட்டுவக் குமரன் தன்னகத்தோடு சொல்வானாயினா னென்க. (வி - ம்.) மாசை - பொன். குஞ்சி - ஆண்மயிர். அரைக்கச்சு - இடையிற்கட்டு பட்டிகை. இவ்வேட்டுவக் குமரன் திருவுரு தன்னைக் கண்ட ஆடவரும் பெண்வடிவு கொண்டு இவனை மணக்க ஆசையை யுளவாக்கு மென்பார். "மற்றுருவு மாடவர்க்கும் ஆசைமூட்டு மவ்வேட்டுவ னகத்தொடு கிளப்பான் " என்றார். (56) கோவைக் கலித்துறை - காட்சி அஃதாவது தலைமகளைத் தலைமகன் கண்ணுற்று இஃதொரு வியப்பென்னென்றல். |