| என்பது ஒத்தாகலின். மெய்ப்பாடாவது புறத்துக் கண்டபொருள் காரணமாக நெஞ்சின்கட் டோன்றிய விகாரத்தின் விளைவு. பயனென்பது நெஞ்சினடுத்ததோர் மெய்ப்பாடு காரணமாகத் தன்வயி னிகழ்ந்த சொல்லா னெய்துவது. அம்மையி னவயவங்களை மன்மதன்கணைகளாக முன்னர் இப்படலம் 42-ஆவது செய்யுளில் கூறியுள்ளனர். ஆண்டறிக. (57) ஐயம் அஃதாவது தலைவியைத் தலைவன் கண்ணுற்ற பின்னர் இங்ஙனந் தோன்றாநின்ற இம்மாது திருமகண் முதலாகிய தெய்வமோ அல்லது மக்களுள்ளாள் கொல்லோவென் றையுறா நிற்றல். | | பகுதியி னண்ட முடிவிற் சுடர்பர லோகங்கொல்லோ | | | தகுதியின் வாழுமை மாதுலகோநந் தனியுலகோ | | | விகுதியில் லாச்சுத்த மாயா புவனத்தொன் றோவிரையப் | | | புகுதியென் றுள்ளந் துரப்பநின் றீங்கொளிர் பூங்கொடிக்கே. |
(இ - ள்.) விரையச் செல்வாயாகவென்று உள்ளத்தைச் செலுத்தற்கேதுவாக இவணின்றொளிர்கின்ற பூங்கொடி போல்வாளுக்கிடம் (பிரகிருதித் தத்துவத்திலுண்டாகிய) பிரகிருதி யண்டத்தின் முடி விடத்தில் விளங்குகின்ற பரலோகமோ? உமையம்மையார் தகுதியுடன் வாழ்கின்ற உலகமோ? நமது கந்தலோகமோ? விகுதியாந் தன்மையிலவாகிய சுத்தமாயா புவனங்களுள் வைத்து ஒரு சுத்தமாயா புவனமோ? யாமறிந்தில மென்க. (வி - ம்.) ஓகாரங்கள் ஐயப்பொரு ளுணர்த்தி நின்றன. பின்னர் விகுதியில்லாச் சுத்தமாயா புவனமெனக் கூறியவதனால் முன்னர்க் கூறிய பகுதியினண்ட மென்றதனை அசுத்தமாயா புவனமெனக் கொள்க. விகுதி - விகிர்தி : மெய்ப்பாடு : உவகையைச் சார்ந்த மருட்கை. பயன் : ஐயந்தீர்தல். (58) துணிவு அஃதாவது ஐயுற்ற பின்னர் உறுப்புக்களியங்கக் கண்ணுற்று இவள் மக்களுள்ளாளே தெய்வமல்லளெனத் துணியாநிற்றல். | | தடையா திருப்பி னமதா ருயிர்நனி சாடுமெனப் | | | படையாண் மதர்விழி பல்காற் றடுப்பன போலிமைகள் | | | புடையா டுவவடி தோய்தலிற் பூமகள் போக்கரும்பே | | | றுடையா ளெனவைகு மாதலிற் பூதலத் தோரணங்கே. |
(இ - ள்.) தடை செய்யாதிருப்பின் நமது அரிய உயிரினைக் கொல்லுமெனப் படைக்கலங்களை ஆட்சிகொண்ட மதர்த்த விழிகளைப் பன்முறை தடுப்பனபோல இமைகளானவை பக்கலிலாடுவன. கால்கள் பொருந்துதலான் மண்மகள் குற்றமிலவாகிய தவப்பேற்றினை யுடையாளென்று சொல்லத்தங்கும். ஆதலான் பூதலத்துள்ளாரின் வைத்து இவள் அணங்கு போல்பவளே யாவள். |