பக்கம் எண் :

களவுப் படலம்947

 சிறுகிய வாடி வெயிலிற் றினகரன் றீயுமிழ்ந்தாங்
 கிறுகிய வாரிளம் பூண்முலை யேந்திழை மாதுளத்து
 முறுகிய காதல் சிறுகிய நோக்கின் முகிழ்த்தனள்விண்
 மறுகிய வாலமுண் டோனருள் போன்ற வளம்பொழிற்கே.

(இ - ள்.) தேவர்கள் வருந்துதற்குக் காரணமான ஆலால விடத்தை யுண்டவனாகிய இறைவன் அருளினைப்போன்ற வளம்பொருந்திய இச்சோலையிடத்துச் சிறிய கண்ணாடியின் சாயலின் வாயிலாகச் செங்கதிர்க் கடவுள் தீயினைச் சொரிந்ததுபோல இறுக்கிய கச்சினை யுடைய அணிகலன்களை யணிந்த முற்றாத முலையினையுடைய இம்மாதி னுள்ளத்துக் கதித்த காதலைச் சிறுத்த நோக்கின் வழியாக வெளியிட்டன ளென்க.

(வி - ம்.) பொழிற்கு - வேற்றுமை மயக்கம். சிறிய வாடியின் வாயிலாகச் செங்கதிர்க் கடவுள் தீயினை வெளியிட்டதுபோல மாதினுளத்துக் கதித்த காதலைச் சிறியகண் வாயிலாக வெளியிட்டன ளென்க. இப்பாட்டு : திணை - குறிஞ்சி. கைகோள் - களவு. கூற்று - தலைமகன் கூற்று. கேட்பது - நெஞ்சு. நெஞ்சென்பது இப்பாட்டில் இல்லையாலெனின் எஞ்சிற் றென்பதாம். இடம் - முன்னிலை. காலம் - நிகழ்காலம். இறுகிய வளரிளம் பூண்முலை மாதுளத்து முறுகியகாதல் முகிழ்த்தனள் என்புழி இவ் என்னுஞ் சுட்டெஞ்சி நின்றது. மெய்ப்பாடு : பெருமிதம். ஈண்டு மெய்ப்பாட்டுப் பொருள்கோள் : கண்ணான் யாப்புற வறிதல். இதனை மெய்ப்பாட்டியல் (27) சூத்திரத்தானறிக. பொருள்கோள் வேறு கூறுவாருமுளர். பயன் குறிப்பறிந்து மகிழ்தல். மாதுளத்து முறுகிய காதல் சிறுகிய நோக்கின் முகிழ்த்தனள் என்றமையின் அவளுடம்பாட்டுக் குறிப்பு, அவணாட்டத்தா னுணர்ந்தான். என்னை ? நாட்டமிரண்டு மறிவுடம்படுத்தற்குக் கூட்டியுரைக்குங் குறிப்புரையாகும்" என்றாராகலின் இப்பாட்டைந்துங் கைக்கிளை.

(61)

புணர்ச்சி துணிதல்

அஃதாவது தலைவியைக் கண்ணுற்று வியப்பெய்தி நின்ற தலைமகன் தேவாமிர்தம் இலம்பாடுடையான் கையிற் கிடைப்பின் அவன் அதனைப் பின்னர் நுகர நினைவதுண்டோ ? நாமுன்னரியற்றிய தவமே இவளை ஆயக் கூட்டத்தினின்றும் பிரித்ததெனப் புணர நினையாநிற்றல்.

 வறங்கூர்ந் தவன்கைத் தலத்திமை யார்கை வழுக்கிவந்து
 நிறங்கூ ரமிழ்தம் படிற்பின்பு மாந்த நினைவதுண்டோ
 அறங்கூர் தணிகை வரைக்குவ டேய்க்கு மலர்முலையைத்
 திறங்கூர் கிளையிற் பிரித்தது நாமுன்பு செய்தவமே.

(இ - ள்.) நிரப்பிடும்பை மிகுந்துள்ளவன் கையின்கண் கண் ணிமைத்தலிலராகிய தேவர்கள் கையின்கண் வழுக்குதலுற்று வந்து நிறம்பொருந்திய அமிர்தம் பொருந்தின் (அவ்வமிழ்தினை நிரப்பிடும்பை யாளன்) பின்னரருந்த நினைத்தலுண்டோ. (அப்பொழுதே நுகர்வன்) அறங்கள் மிகுந்த தணிகைமலையின் குவட்டினை யொக்கும் மலர்களை