பக்கம் எண் :

களவுப் படலம்949

(இ - ள்.) மையினைப்போல் விளங்குதல் செய்தொளிருகின்ற கூந்தலின் கண்ணுள்ள கரியகூழை (உடம்பினோடு தொடர்புடையனவாகி அதினின்றும் வேறுபாடுற்ற தலைமயிரின்முடி உள்ள நிகழ்ச்சி யானே தன்வயத்ததன்றி) நெகிழ்தலான் (விரிந்து) சோர்வடைய வளப்பம் பொருந்திய காதில் பெய்தல் பொருந்திய ஓரணியானது (உறுப்பிடைப் பூட்டுறப் புனையாது பெய்துவைத்தன வாகலான் தோடு முதலாயின எளிதின் வீழ்வனவாகும். அவை வீழ்தற்கு ஏதுவாய நிகழ்ச்சி நிரம்பத்தோன்றாது. இடை நிகர்த்ததாகலின் ஒன்று நிற்பக் காதினின்று) நீங்கி மண்ணிடத்து வீழாநிற்க, கையினிடத் தணியப்பெற்ற வளையும், பிறவற்றையும் (அக்கூழையுந் தோடும்போலப் பெய்யப்படும் முறைமையவாகிய வளைகள் முன்கையிடத்தும், விரலினிடத்தும்) கழல்வனவற்றைச் செறித்தலும், பல்காலும் முலைப்பாரத்தினால் தேய்கின்ற இடையின்கட் பொருந்தி நில்லாத நல்லாடையினை (உடுத்த உடையினைப் பல்காலும்) அழித்துடுத்தும் தன்மையினை
உடையவளா யினாளென்க.

(வி - ம்.) இச்செய்யுளான் கூழைவிரித்தல், காதொன்றுகளைதல், ஊழணிதைவரல், உடைபெயர்த்துடுத்தல் என்னும் இரண்டாவது மெய்ப்பாடு கூறினார்.

(64)

 ஓதியு நுதலு நீவி யொளிர்முலை வருட வையன்
 பேதுகொ ளுளத்தி னோடு முகுவன பெரிதுந் தாங்கி
 மாதர்வண் கலைகால் யாத்து வலிந்துபொய்த் தொடுங்கி யன்பன்
 ஆதரத் தெடுத்துப் புல்லுந் தொறுமெழு நகைய ளானாள்.

(இ - ள்.) (உடைபெயர்த்துடுத்து அற்றம் மறைக்குங் கையான்) கூந்தலினையும், நெற்றியினையும் நீவி ஒளிர்கின்ற தனத்தினைத் தடவா நிற்றலாகிய அல்குல் தைவரலும், அதன் பின்னர்த்தாகிய தலைவன் மாறுபட்ட உள்ளத்தினோடு நீங்குவனவாகிய கடிசூத்திர முதலியவற்றையுந் தாங்குதல் செய்து அழகிய வளப்பம் பொருந்திய கலைகளைக் கட்டி (புணர்ச்சியை வேண்டாதாள்போல) வன்மை படைத்துப் பொய்யாக ஒடுங்குதல் செய்து தலைவன்பாற் கொண்ட காதல் காரணமாக (படைத்திட்டுக் கொள்வலியான் தடுக்கப்படாது நிறை யழிதலின் இருகையினையும் முயங்கல் விருப்பத்தான்) எடுக்கத் தலைவன் தழுவுந்தொறு மெழுகின்ற நகையையுடையளாயின ளென்க.

(வி - ம்.) இச்செய்யுளான் அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல், இருகையும் எடுத்தலென்னும் மூன்றாவது மெய்ப்பாடு கூறினார். உடைபெயர்த்துடுத்து அற்றம் மறைக்குங் கையினை அல்குல் தைவர லென்றார். அணிந்தவை திருத்தலென்பது கடிசூத்திரம் முதலிய திருத்தல் என்க. கடிசூத்திர முதலியன - உள்ளாடை முதலியன. இவ்வலியுறுத்தல் (புணர்ச்சி வேண்டாதாள்போல) இல்லாதவன்மையை நிலைபெறுத்தல். "எழுங்கைய ளானாள்" என்பதும் பாடம். கைகள் முயங்கல் விருப்பத்தான் எழுவனபோல்வதோர் குறிப்பு. மாதர் - அழகு.

(65)

 உரைத்தபன் னிருமெய்ப் பாடு மொளிர்பசுங் கொடியி னின்ற
 விரைத்தமைக் கூந்தற் செவ்வாய் வெண்ணகை மடந்தை யெய்த