பக்கம் எண் :

950தணிகைப் புராணம்

 இரைத்துவண் டிமிருந் தாரா னியற்கையம் புணர்ச்சி மற்றும்
 தரைத்தலை வழங்கு மாறு தான்செய முன்னி னானால்.

(இ - ள்.) (இயற்கைப் புணர்ச்சியின் முன்னர் நிகழுமென்ற மூவகை மெய்ப்பாடும் ஒவ்வொன்று நந்நான்கு பாகுபாடடையு மெனக்) கூறிய பன்னிரு மெய்ப்பாடுகளும் ஒளிவிடுகின்ற பூங்கொடி போல நின்ற வாசனையையுடைய மைபோன்ற கூந்தலினையும், செவ்வாயினையும் வெள்ளிய பல்லினையுமுடைய தலைவியடைய இரைத்தல் செய்து வண்டொலிக்கும் மாலையையுடையான் இயற்கைப் புணர்ச்சியும் பிறவும், பூமியின்கண் வழங்க நினைத்தனனென்க.

(வி - ம்.) இப்பன்னிரு மெய்ப்பாடுந் தலைவியின்மாட்டு நிகழ்ந்த பின்னரே புணர்ச்சி நிகழுமென்க. இதனைதொல். பொருள். மெய்ப் பாட்டியலிற் காண்க.

(66)

கோவைக் கலித்துறை
புணர்ச்சி

அஃதாவது ஊழாற் புணர்ச்சியெய்திய தலைமகன் புணர்ச்சியின்பத் தியல்பு கூறாநிற்றல்.

 பொருப்பின் வளர்கொடி புல்லினி தாகலிற் பூரணனும்
 விருப்பி னுடலமொற் றித்துநின் றாங்கிவ் விலங்கல்வளர்
 அருப்பின் முலைபசுங் கொம்பொடொற் றிப்பி னலாதமையா
 துருப்பின்னி யெங்கு மிலாநல னெய்திய வுள்ளகமே.

(இ - ள்.) (தலைவியின்) வடிவுடன் கலந்து யாண்டு மிலவாகிய இன்ப நலத்தினையடைந்த எனதுள்ளேயுள்ள நெஞ்சே, இமயமலையின்கண் வளர்கின்ற பூங்கொடி போன்ற உமையம்மையார் தழுவுத லினிதாகலினாலே எங்கு நிறைந்த இறைவனும் விழைவான் (இருவருடலமும்) ஒருங்கியைந்து நின்றாற்போல இவ்வள்ளிமலையில் வளர்கின்ற அரும்பினையொத்த தனங்களையுடைய பசிய கொம்புபோல் வாளோடு ஒருங்கியைந்து நிற்பினல்லது அமையாதென்க.

(வி - ம்.) மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்ச்சி. அரும்பு - அருப்பென விகாரம். உரு - வடிவு. ஈறிலின்ப மென்பார் எங்குமிலா நலமென்றார்.

(67)

தலைவியை மகிழ்தல்

அஃதாவது தான் ஈறிலின்பமெய்தற் கேதுவாய் நின்ற தலைவியை மகிழ்ந்து கூறாநிற்றல்.

 எனதா ருயிர்க்கு முடலே யவளுட லீர்ங்குழலாள்
 தனதா ருயிர்க்கு முடலே யெனதுடல் சார்ந்துநின்ற
 எனதா ருயிர்க்கு முயிரே யவளுயி ரேந்துகொங்கை
 தனதா ருயிர்க்கு முயிரே யெனது தனியுயிரே.