பக்கம் எண் :

952தணிகைப் புராணம்

நயப்புரைத் தயிர்ப்பொழித்தல்

அஃதாவது கிளவிவேட்டு வருந்துதலைக் கண்ட தலைமகள் மூரன் முறுவல் செய்யத் தலைமகனதுபெற்றுச் சொல்லாடாமையா லுளதாகிய இன்னல் நீங்கிக் குறிஞ்சி நிலத்துச் சுனையின்கண்ணுள்ள வண்டுகளே நீங்களூது மலரி்ன் இவள் கண்போலு மலர்களுள்ளனவோ மெய்கூறு விராகவென்றல்.

 பண்டே யுளனு முளனும் பிணைந்தவப் பண்பின்வளர்
 கண்டே யனைய மொழிமான் முகத்துக் கதிர்த்தமிழ்தம்
 கொண்டேர் செவிகண் முகந்து குமிழின் மறிவிழியின்
 உண்டே மலர்சுனை வாய்வண்டு காண்மெய் யுரைமின்களே.

(இ - ள்.) உளமும் உளமும் (இப்பொழுது சேர்ந்தனவாயினும்) முன்னரே பழைமையாகக் கூடிய பண்பிலே வளருகின்ற கண்டினை யொத்த மொழியினையுடைய மானின் முகத்திடத்துக் கதிர்த்தலைச்செய்து அமிழ்தினைத் தன்பாற்கொண்டு அழகிய செவிகளை முகந்து குமிழ்ப் பூவினை யொக்கும் மூக்கிற்றாக்கி மறித்தலைச் செய்கின்ற விழியினைப் போன்ற மலர்கள் குறிஞ்சி நிலத்துள்ள சுனையிடத்து வண்டுகளே (நீங்களூதிய பூக்களில்) உளதா ? (உளதாமாயின்) உண்மை கூறுவீர்களாக வென்க.

(வி - ம்.) மெய்ப்பாடு : உவகை. பயன் : நயப்புணர்த்தல். இயற்கையன்பினானும் அவள் குணங்களாற்றோன்றிய செயற்கை யன்பினானும் செலுத்தப்பெற்று நின்ற தனதன்பு மிகுதியை யுணர்த்தலென்பது நயப்புணர்த்தல் என்க.

(71)

பிரிவச்சம்

அஃதாவது தண்ணீர்வேட்டு அதனை உண்டு உயிர்பெற்றான் இதனான் உயிர்பெற்றோமெனக் கருதி அதனிடத்து வேட்கை நீங்காதவாறு போல தலைவிமாட்டு வேட்கையெய்தி அவளை அரிதிற்கூடி உயிர்பெற்றானாகலின் இவளானுயிர்பெற்றே மென்றுணர்ந்து அவண்மேனிகழ்கின்ற அன்புடனே பிரிதலின் பிரிவச்சமாயிற்று.

 மணிநீர்க் கயத்து மலரிடை தட்பினும் வார்கழுத்துப்
 பிணிநீர் மையிற்சற்று நீங்கினு மூழி பெயர்ந்தனைய
 துணிநீர் மகன்றிலிற் றண்டாது காமத் துறைபடியும்
 அணிநீர் மையினுயி ரோராங் ககல்கதி லம்புவிக்கே.

(இ - ள்.) நீலமணி போன்ற நீரினையுடைய தடாகத்துள்ள மலர்கள் இடையே தடுத்தல் செய்யினும், நீண்ட கழுத்துக்கள் ஒன்றினோடொன்று பிணைந்துள்ள நீர்மையினின்று சிறிது நீங்கினும் (அக்கணப் பொழுதினை) ஊழிக்காலம் பெயர்ந்தாலொப்பக் கருதுகின்ற தெளிந்த நீரின்கண்ணுள்ள மகன்றிற் பறவைபோல நீங்காது காமத்துறைக் கண்ணே மூழ்கும் அழகிய நீர்மையினையுடைய உயிர் அழகிய பூமியினிடத்து (முற்பிறப்பில் இருவேமாய்க் கூடிப்போந்தனம்) இப் புணர்ச்சிக்கு முன்னர் வெவ்வேறா யுற்ற துன்பத்து இன்று போவதற்