பக்கம் எண் :

களவுப் படலம்953

கெய்திய பிரிவதாகிய காமத்துடனே (இருவருக்கும்) உயிர் ஒரு தன்மையாகப் போவதில் விருப்பமுடையேன் என்க.

(வி - ம்.) மகன்றில் - ஒரு பறவை : அன்றில் என்பது வேறு. துணி - தெளிதல். தில் - விழைவு. புவிக்கு : வேற்றுமை மயக்கம். மெய்ப்பாடு : அச்சத்தைச்சார்ந்த பெருமிதம். பயன் : பிரிவுணர்த்தல். ஓராங்கு - ஒருசேர வென்பாருமுளர்.

(72)

பிரிவுணர்த்தல்

அஃதாவது ஐவகைப் புணர்ச்சியும் பெற்றுப் புணர்வதன் முன்னும் புணர்ந்த பின்னரும் ஒத்த அன்பினனாய் நின்ற தலைமகன் பிரியுமா றென்னையெனின், இச்கூட்டம் நெடுங்காலஞ் செல்லக்கடவதாக இருவரையுங் கூட்டிய பால்வரை தெய்வம் பிரியாமற் பிரிவிக்கும். அது பிரிவிக்குமாறு யாங்ஙனமெனின் தனதன்பா னின்பமெய்தி நலம்புனைந் துரைத்தல் கேட்டு எம்பெருமான் முன்னின்று இறப்பப் பெரியதோர் நாணின்மை செய்தேனெனத் தலைமகள் நாணிவருந்தாநிற்கத் தலைமகன் அது கண்டு இவள் வருந்தாநிற்பது நான் பிரிவேனாகக் கருதியதாகவுட் கொண்டு அவளுக்குத்தான் பிரிவின்மை கூறாநிற்றல்.

 இமையார்க் கிறையவன் வீராட்ட காசத்தெம் மானிமயத்
 துமையாள் கணவன் றணிகைப்பி ரானரு ளாலுவன்றன்
 அமையாப் பதம்பெறி னாரிழப் பாரலர் வாழ்க்கைநல்லார்
 தமையா ணினைத்தணப் பேன்கொ றளர்ந்தெற் றளர்க்கலையே.

(இ - ள்.) (கண்) இமைத்தலிலவாகிய தேவர்களுக்குத் தலைவன், வீராட்டகாசத்தின் கண்ணெழுந்தருளியிருக்கின்ற எமது தலைவன் இமயமலையிற் பிறந்த உமையம்மையாருக்குத் தலைவன் தணிகையின் கண்ணுள்ள பெருமையையுடையான் அவன் திருவருளால் அவனது இன்பம் எஞ்ஞான்றுங் குறையாத் திருவடியைப் பெற்றால் (அதனை) இழப்பவர் யாவர்: ஒருவருமிலர். தாமரை மலரின்கண் வாழ்தலையுடைய, நல்லார்களை (கல்வியானும், செல்வத்தானும்) அடிமையாகக் கொண்ட நின்னை யான் நீங்குவன் கொல்லோ (நான் பிரிவேன் என) வருந்தி என்னை வருத்தாதேகொள் என்றானென்க.

(வி - ம்.) உவன் - அவன். பதம் - திருவடி. நல்லார் + தம் + ஐ + ஆள் எனப் பிரித்து நல்லாருடைய அழகை ஆளும் எனக் கூறுவாருமுளர். தளர்ந்து - வருந்தி. மெய்ப்பாடு : அச்சத்தைச்சார்ந்த பெருமிதம். பயன் : பிரிவச்சமுணர்த்தல்.

(73)

பருவரலறிதல்

அஃதாவது நீக்கமின்மை மொழியக் கேட்ட தலைமகள் நீங்கல் என்பதொன்றுண்டு போலும் என உட்கொண்டு முன் நாணினால் வந்தெய்திய வருத்தம் நீங்கி இறப்பப் பெரியதோரின்னலெய்த அதனைக் கண்ணுற்று இவள் மேன்மேலின்னலுறுவது "நீங்கிற் கூடுதலரி" தென்று நினைந்தோ, நெடும்போது இவண் வதியின் குடிப்பழியாமென்று கருதியோ அறிகிலேனென அவள் வருத்தமறியாநிற்றல்.