| மயிரை நீக்கிய மானும், கலைகளை நீக்கிய திங்களும், பயிர்தள்ளிய சூலுமாகிய இவை எனக்குப் பின்நிற்பனவன்றி முன்னர் வைத்தெண்ணப்படும் தன்மையுடையன வல்லவெனத் தலைவன் தன்னிலை கூறாநிற்றல். | | உயிர்நீத்த தேகமு மொண்மணி நீத்த வுரகமும்வார் | | | மயிர்நீத்த மானுங் கலைநீத்த திங்களும் வாங்கிமுற்றாப் | | | பயிர்நீத்த சூலுநிற் பாற்றினென் னீர்க்குப்பின் னாவதன்றிச் | | | செயிர்நீத்த பொற்றொடி யாய்முந்து சேக்குந் திறனில்லையே. |
(இ - ள்.) உயிரினை நீங்கிய உடலும், ஒளிபொருந்திய மணியினை நீக்கிய பாம்பும், மயிரினை நீக்கிய கவரிமானும், கலைகளை நீக்கிய வெண்கதிர்க் கடவுளும், வளைந்து முதிர்தலில்லாத பயிர்தள்ளிய சூலுமாகிய இவைகள் நின்னை நீக்கின் என் நீர்மையினுக்குப் பின்னாவ தல்லாமல் குற்றம் நீங்கிய பொன்னாலாகிய வளையலை யணிந்தவளே முன்னர்த் தங்கச்செய்து எண்ணுந்தன்மையுடையன வல்லவென்க. (வி - ம்.) மயிர்நீத்த மான் - கவரிமா. வாங்கி முற்றாப் பயிர்நீத்த சூல் - வளைந்த முதிர்ச்சி இல்லாத பயிர்தள்ளிய சூல். உள்ளீடில்லாத பதடியையீன்ற பயிர். நிற்பாற்றின் - நின்னை நீங்கின். இழக்குந்தன்மை அலகிடுங்கால் என்தன்மைக்குப் பின்னாவதன்றி முன்னர்த் தங்கும் தன்மையுடையவல்ல வென்பார் மானும், உரகமும், திங்களும், பயிர் நீத்தசூலும், என்னீர்க்குப் பின்னாவதன்றி முந்து சேக்குந் திறனில்லை யென்றார் என்க. மெய்ப்பாடு : அச்சத்தைச்சார்ந்த பெருமிதம். பயன் : தன்னிலை உரைத்தல். (76) விடலரிதென்றல் அஃதாவது, உன்னை நீங்கின் யான் என்னீர்மை இழிக்கப்படுவதன்றி முற்படவெண்ணுந் தன்மையையுடையவல்லவாயினும் யான் இறைவனருளால் அவன் போன்ற முதன்மையை அடையினும் உன்னை விடுதலை விரும்புவேனல்லே னென்றல். | | எண்குணத் தானிம யச்சிலை வாங்கின னேற்றுமராத் | | | திண்குணத் தானரு ளாலவன் முற்றன்மை தேக்கிடினும் | | | பெண்குணத் தாலுயர் மாதே விடலிபெட் பேனலன்பண் | | | வண்குணத் தாடளி பாடல றாவள்ளி மால்வரைக்கே. |
(இ - ள்.) பண்ணினைப் பாடுதல் செய்து வளவிய குணத்தானாடல் செய்கின்ற வண்டுகளானவை அப்பாடல் நீங்காத வள்ளிமலையினிடத்து எண்குணங்களை யுடையானும் இமயமாகிய வில்லினை வளைத்தல் செய்து ஏறிடுகின்ற பாம்பாகிய திண்ணிய கயிற்றினையுடையானுமாகிய இறைவனது அருளினால் அவ்விறைவன் தலைமைத் தன்மையினை எனக்குக் கொடுத்தாலும் பெண்களுக்கமைந்த குணங்களானுயர்ந்த மாதே விடுதலை விரும்புவேனல்லன் என்க. (வி - ம்.) உன்னை நீங்குதலுடையனாய் இறைவன் முதன்மைத் தன்மையை யான் விரும்பேன் என்பான் "முதன்மை தேக்கிடினும் |