| கின்ற சிலவாகிய கூந்தலினையுடைய நற்குணங்களமைந்தவளே (அவ்விடம் யான்) சென்று மீளும்பொழுதினும் ஒளியோடுகூடிய கருணையையுடைய கண்கள் காதினிடத்துச் சென்று திரும்பும்பொழுது நெடும் பொழுதாகு மென்க. (வி - ம்.) தளி - துளி. மீட்சி - மீடல். வாள் - ஒளி. மறிவது - மடங்குதல். நீட்டிக்கும் - நெடுங்காலமாகும். "சாலநீட்டித்த லோடு சார்ந்தபா ணித்தல் தானும், நீலவுண் கண்ணாய் மற்றும் நொடித்தலும் நெடும்போழ் தென்ப" என்னும் சூடாமணி நிகண்டானறிக. கண்களானவை காதின்பாற் சென்று மீளுங்காலம் நெடுங் காலமெனக் கருத யானத்துணை விரைவிற் சென்று மீளுவன் நீ வருந்தாதேகொள் என வற்புறுத்துவான் "செவிபோந் தளிவாட்கண்மறிவது நீட்டிக்கும் பூங்குழலே" என்றார். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : இடமணித்தென்று வற்புறுத்தல். (79) அகல்பவன் வற்புறுத் தாயத்துய்த்தல் அஃதாவது நீங்குமிட மணிமை கூறி யகலாநின்றவன் நீர்நிலையி னிடத்துச் செல்லுமன்னப் பறவைபோல நீ பாங்கியர்குலத்துச் செல்வாயாக யான் சிறிதுபொழுது மறைந்திருந்து வருவல் எனக் கூறா நிற்றல். | | என்மனம் பாச மெறிவலை யானெறி யும்வலைஞன் | | | நின்மன மாகக் கரந்திங்ங னேவந்து நின்றிடுவல் | | | பன்மல ரோடை படரனம் போலநின் பாங்கியரில் | | | நன்மணம் வீசு நறுநுதன் மாது நணுகுகவே. |
(இ - ள்.) பல மலர்களையுடைய நீர்நிலையின்கட் செல்லுகின்ற அன்னப் பறவை போல நின் (உயிர்ப்) பாங்கியர் கூட்டத்தில் நறுமணம் வீசுகின்ற நல்ல நெற்றியினையுடைய பெண்ணே செல்வாயாக. (வலையினை இழுக்கும்) கயிறு எனது மனமாக, வீசுதல் செய்கின்ற வலையானாக (அவ்வலையினை வீசுகின்ற வலைஞன்) நினது மனமாகக் கரத்தல் செய்து (கணப்பொழுதில்) இவ்விடத்து வந்து நிற்பேனென்றா னென்க. (வி - ம்.) கரத்தல் - மறைத்தல். ஓடை - நீர்நிலை. படர் - செல்லுதல். பாங்கியர் - உயிர்த் தோழிமார். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : இடங்குறித்து வற்புறுத்தல். (80) கிழத்தி சேறல் உளத்தொடு கிளத்தல் அஃதாவது ஆயத்துய்த்த தலைமகன் அவள் சேறலைநோக்கி வருந்தி யுளத்தினொடு கூறாநிற்றல். | | எருத்தத் திரண்டு விழிபடை யாமையெ னாருயிரை | | | வருத்தத் திருத்த முகம்பிறக் கிட்டு மயினடக்கும் | | | திருத்தத்தை நாணி விளர்த்தவென்னாதய னூர்திசெங்கோல் | | | பொருத்தத்த னூர்தியும் பண்டே விளர்த்துப் புகழ்கொண்டவே. |
|