பக்கம் எண் :

களவுப் படலம்963

முழவமென்க. முழவு - மத்தளம். ஆரம் - முத்துமாலை. கவரி - சாமரை. குரு - நிறம். ஏர் - அழகு. கும்பம் - குடம். மயிரொழுக்கு - மயிர் வரிசை. கொடி - சீலைக்கொடி. இரு - பெரிய. விளக்கு - விளக்கமாகிய. எண்வகை மங்கலப்பொருள். இவையெனப் பின்வரும் வெண்பாவானறிக. "சாமரை தீபம் தமனியப் பொற்குடம், காமர் கயலின் இணை முதலாத் - தேமருவு, கண்ணாடி தோட்டி கதலிகை வண்முரசம், எண்ணிய மங்கலங்கள் எட்டுழு மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : மகிழ்வுரைத்தல்.

(90)

மெய்தொட்டுப்பயிறல்

அஃதாவது தலைவன் தலைவியை மெய்யைத் தீண்டிப் பயிலாநிற்கும் நிலைமை.

 நந்தவெஞ் சூர னடுகளம் போந்த நளியமிழ்தம்
 மந்தரம் போலுயி ரீவது வள்ளி வரையமுத
 சுந்தரி பூண்முலைக் குன்றமொன் றோதொடித் தோணுதலும்
 கொந்தல ரோதியுங் கோமள மாருரு யாவையுமே.

(இ - ள்.) (போரின்கண் யாவரும்) கெட வெவ்விய சூரன் போர்க் களத்தின்கண் வந்த குளிர்ச்சியுடன் கூடிய அமிழ்தத்தையுடைய மந்தரமலையைப்போலக் காலன் கவர்ந்தஉயிரினைத் தருவதுவள்ளிவரைக் கண்ணுள்ள அமுத வடிவமாகிய சுந்தரியின் அணிகலன்களையுடைய முலையாகிய மலையொன்றுதானோ, வளையலை யணிந்த தோள்களும், நெற்றியும், பூங்கொத்துக்கள் விரிகின்ற கூந்தலும், அழகு ஆர்ந்த வடிவம் யாவையுமாம் என்க.

(வி - ம்.) நந்த - கெட. சூரன் அடுகளத்திற் படைகள் யாவும் இறக்க அமிழ்த மந்தரமலையைக் கொணர்ந்து இறந்த படைகள் யாவும் உயிர்பெற் றெழுந்தன வென்பது கந்தபுராணக் கதை. கோமளம் - அழகு. உரு - வடிவம். மெய்ப்பாடு : உவகை. பயன் : மெய் தொட்டுப் பயிறல்.

(91)

பொய் பாராட்டல்

அஃதாவது மெய்தொட்டுப் பயின்று நின்றுழித் தலைவி குறிப்பறிந்து அவளை ஓதியும் நுதலும் நீவிப் பொய்செய்யாநின்று புனைந்துரைத்தல்.

 இயங்குந் திறனுடைந் தீரா யிரமருப் பேய்ந்துடற்றத்
 தயங்குந் திறலயி ராவணஞ் சார்வது தையனல்லாய்
 உயங்குங் கெனவிடைச் சீய நலியு முவாமருப்பின்
 வயங்கண்டு வாளாங் கிருந்தது வெள்ளி வரையகத்தே.

(இ - ள்.) நீ நடக்குந் திறலினுக்குத் தோற்று (ஈங்குப் பொருந் துவதாகிய) இரண்டாயிரம் மருப்பினைப் பொருந்திய (பகைவரை) வருத்த விளங்கும் வலியினையுடைய அயிராவணமென்னும் யானை அழகினையுடைய நல்லாய் அவ்விடத்து வருந்துவாயாகவென இடை