| யான சிங்கத்தை வருத்தும் (தனமாகிய) யானை மருப்பின் வெற்றியினை யறிந்து வெள்ளி வெற்பிடத்து வாளாவிருந்த தென்க. (வி - ம்.) இயங்குதல் - நடத்தல். உடைதல் - தோற்றல். அயிரா வணம் - இறைவனூரும் யானை, இரண்டாயிர மருப்புடையது. உங்கு - அவ்விடத்து. உவா - யானை. வயம் - வெற்றி. சீயம் - சிங்கம். மெய்ப்பாடு : உவகை. பயன் : புனைந்துரைத்தல். (92) இடம்பெற்றுத்தழா அல் அஃதாவது மெய் தொட்டுப்பயிறல், பொய் பாராட்டல் என்னு மவ்விரண்டானுந் தலைவியை முகம் பெற்றவன் அவணோக்கிய நோக்கினைத் தன்னிடத்தே சேர்த்திக்கொண்டு கூறல். | | வீராட்ட காச விமலன் றணிகைவெற் பாள்குமரன் | | | தாராட்டு வீரர் முதலோர் கணத்தர ணத்தநெடும் | | | போராட்டு வேலுங் கணையும் பொரும்புறம் போக்கொழியக் | | | காராட்டு பூங்குழ லாயென்னை யாத்தநின் கண்ணிணையே. |
(இ - ள்.) மேகத்தினை வருத்துகின்ற பூவையணிந்த குழலினை யுடையாய் வீராட்டகாசமென்னும் இடத்தின்கண்ணுள்ளவனாகிய மலமற்றவனது தணிகைமலையை யாட்சி செய்கின்ற முருகன் போரிடத்துப் பொருந்திய வீரர் முதலிய போர்க்கூட்டத்தின் கணத்தின்கணுளவாகிய புண்ணினைச் செய்கின்ற நீண்ட போரினிடத்துள்ள வேற்படையையும், கணைகளையும் போர் செய்யாநிற்கும் (அச்செயலொடு) யான் புறத்திலே போதலொழிய நின்னிருகண்களாவன என்னைக் கட்டின வென்க. (வி - ம்.) குமரன் வேலையும், வீரர்கணையையும் போர்தொடங்கா நிற்குமென்க. ரணத்த - புண்செய்வனவாகிய. காராட்டு பூங்குழல். ஆட்டல் - வருத்தல். யாத்தல் - கட்டல். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : முகம் பெறுதல். (93) நாணடமழைக்கண் வாணுதல் புதைத்தல் அஃதாவது அவள்பெரு நாணினளாகலின் தலைமகன் கூற்றினை உணர்ந்து கூட்டத்திற் கிடையூறாக ஒளிர்ந்த கண்களைத் தலைவி புதைத்தல். | | ஒலிதழற் பூதத் தொளிர்விழி யோடுனக் கொற்றுமையால் | | | மெலிதரு காற்றுணை வேறார் நினையன்றி மென்கரமே | | | பலிதரு கென்று மடவார் நிறைகொள் பரனுயிர்த்த | | | வலிதகு மைந்தன் றணிகைவெற் பேருமிம் மால்வரைக்கே. |
(இ - ள்.) பிச்சையினை யிடுகவென்று (தாருகவனத்தின்கண்ணுள்ள) முனிமகளிர் நிறையினைக் கவர்ந்த பரமனீன்ற வலிதகுதியாக வாய்க்கப்பெற்ற குமரனது தணிகைமலையினை யொக்கும் இப்பெரிய வள்ளிமலையின்கண் மெல்லிய கைகளே ஒலித்தல் செய்கின்ற அழற் பூதத்தின்கூற்றால் ஒளிர்தலைச் செய்கின்ற கண்ணோடு உனக்குச் சம்பந்த |