| முண்மையான் (அக்கண்) மெலிகின்ற காலத்துத் துணை நின்னையன்றி வேறு துணையாக ஒருவருமில்லை யென்க. (வி - ம்.) ஞானேந்திரியங்கள் மெய், வாய், கண், மூக்குச், செவி என இவையைந்து. கன்மேந்திரியங்கள் வாக்கு, பாணி, பாதம், பாயுரு, உபத்தம். இவ்விந்திரியங்கள் பத்தனுள் ஞானேந்திரியத்துள் கண்ணென்னு மிந்திரியமும் கன்மேந்திரியத்துள் பாணி யென்னும் இந்திரியமுமாகிய இவ்விரண்டும் சூட்சும பஞ்சபூதம் ஐந்தனுள் ரூப மென்கின்ற அழற்பூதத்திற் பிறக்குமுண்மைத் தன்மையினை நுனித் துணர்ந்து "ஒலிதழற் பூதத் தொளிர்விழி யோடுனக் கொற்றுமையால், மெலிதரு காற்றுணை வேறார் நினையன்றி மென்கரமே" என்றார். ஒற்றுமை - சம்பந்தம். கண்ணிந்திரியம் மெலியும் காலத்துக் காது முதலிய இந்திரியங்கள் உதவி செய்யாது கைசெய்தது ஒரு நிலைக்களத்துப் பிறந்த காரணத்தா னெனவறிக. ஏர் : உவமவுருபு. மடவார்நிறை கோடல் வெளிப்படை. மெய்ப்பாடு : அச்சம். பயன் : ஆற்றாமை நீங்கல். (94) இடையூறு கிளத்தல் அஃதாவது தலைமகள் நாணிக் கண்புதையாநிற்ப, இவள்கண் புதையாநின்றது கண்கள் என்னை வருத்தம் செய்யுமென் றுட்கொண்டன்றோ, நின் அங்கமுழுவதும் என்மனத்தை முன்னரே பிணித்ததெனக் கூறல். | | கந்தென் மணிப்புயத் தானிங்ஙன் வாடக் கருத்தைவெளி | | | தந்தென் முகத்தி லிருத்தியென் றோதடங் கண்புதைத்தாய் | | | மைந்தென் மதர்த்துப் புடைத்துப் புளக மலிமுலையாய் | | | முந்தென் மனத்தைப் பிணித்தது னங்க முழுவதுமே. |
(இ - ள்.) நீலமணித் தூண்போலும் தோளையுடைய யான் இங்ஙனம் வாடுதலடைய (எனதுள்ளக் கருத்தை) வெளிப்படச் செய்து எனது முகத்தின்கண் ணிருக்கின்றா யென்றல்லவா பெருமைபொருந்திய கண்ணைப் புதைத்தனை; வலியுடையவென்று சொல்ல மதர்த்தல்செய்து திரண்டு மயிர்க்குச்சு நிறைந்த தனங்களை யுடையாய், உன் உறுப்பு முழுவதும் முன்னரே என்மனத்தினைக் கட்டுதல் செய்த தென்க. (வி - ம்.) கந்து - தூண். மணி - நீலமணி. கருத்தை - எனதுட் கிடையை. இருத்தி - இருக்கின்றாய். மைந்து - வலி. அங்கம் - உறுப்பு. மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமை யுணர்த்தல். (95) நீடுநினைந்திரங்கல் அஃதாவது புணர்ச்சி நிகழாது காலம் பாணித்தமைக்கு இரங்கி இரக்கந்தோன்றக் கூறல். | | ஏமங் கனிந்தவெ னெஞ்சகம் போலு மிடுகிடைமென் | | | தூமங் கனிந்த சுருணெடுங் கூழைத் தொடிக்கரத்தாய் | | | சேமங் கனிந்த கனிகண்டு நாவெழுந் தீம்புனல்போற் | | | காமங் கனிந்துறின் யாவர்கொ லாற்றக் கடவர்களே. |
|