| (இ - ள்.) இன்பம் பொருந்திய என் நெஞ்சினைப்போலும் நுண்ணிய இடையினையும் மெல்லிய புகையினைப்போலக் கருமை முதிர்ந்த கடைகுழன்ற நீட்சி பொருந்திய கூந்தலினையும் வளைகளணிந்த கரத்தினையுமுடையாய், காவலின்கட்பட்டு முதிர்ந்த பழத்தினைக் கண்ட காரணத்தால் நாவினூறுகின்ற இனிய நீர்போலக் காமமானது காழ்கொளின் ஆற்றுந்தன்மை யுடையர். (இவ்வுலகினிடத்து) யாவருள ரென்க. (வி - ம்.) ஏமம் - இன்பம். இடுகிடை - (நெஞ்சம்போல) சுருங்கிய இடை; நுட்பமான இடையென்க. தூமம் - புகை. சேமம் - காவல். மெய்ப்பாடு : அழுகை. பயன் : இரங்கல். (96) வருந்தி நாண் விடுதல் அஃதாவது தலைமகன்றன் ஆற்றாமை மிகுதிகூறக் கேட்டு ஒரு காலத்துந் தன்னைவிட்டு நீங்காத நாண்முதலிய குணங்கள் நீங்கினாலன்றிக் கூட்டமில்லையென வருந்தி யக்குணங்களை அவள் நீங்கிநிற்றல். | | மலமாயை கன்ம மொழியினல் லான்முத்தி வாழ்க்கையில்லைக் | | | குலமார் மடமச்ச நாணொழிந் தாலன்றிக் கூட்டமில்லைச் | | | சலமார் பிறவியுட் பெண்பவம் போனனி தாழ்ந்ததுண்டோ | | | நலமா ருலகத் ததுவொழி மாதவ நாடிலமே. |
(இ - ள்.) ஆணவமலம், மாயாமலம், கன்மமலம் ஆகிய இம்மூன்றும் நீங்கினாலல்லாமல் முத்தியாகிய வாழ்வு (ஆன்மாக்களுக்கில்லையாம். அதுபோல்) மேன்மைபொருந்திய மடமும், அச்சமும், நாணமும் நீங்கினல்லாமல் (பெண்களுக் காடவரோடு) சேர்க்கையின்றாம். ஆதலால் துன்பம் பொருந்திய பிறவியினுள் வைத்துப் பெண் பிறப்புப்போலத் தாழ்வான தொன்றுண்டோ. ஆதலால் எல்லா நலங்களும் பொருந்திய வுலகத்து அப்பெண் பிறப்பு நீங்கத்தக்க பெரிய தவத்தினை நாம் நாடினேமில்லை. யாது செய்வோம் என்க. (வி - ம்.) நாணம் - வெட்கம். மடம் - கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை. பயிர்ப்பு - பயிலாத பொருட்கணுண்டாம் அருவருப்பு. அச்சம் - பயம். மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமை நீங்கல். (97) மருங்கணைதல் அஃதாவது தலைமகள் நாணிழந்து வருந்தாநிற்பச் சென்று சார்த லருமையின் தலைமகன் தன்னாதரவினால் அவ்வருத்தந் தணிப்பான் போன்று முலையொடு முனிந்து ஒருகையால் இறுமருங்குறாங்கியும் ஒருகையால் அளிக்குலம் விலக்குவான் அளகந்தொட்டு அளியென்ற பெயர் நுமக்குக் குறிப்பாகும் வெளிப்படையாவதில்லை யெனக்கூறா நிற்றல். | | வளியென்று மாடணு காது வசைவரு மென்றனைய | | | தெளியொன்று சிற்றிடைக் கோபகை செம்பொற் சிகரியன்ன |
|