பக்கம் எண் :

களவுப் படலம்967

 களியொன்று கொங்கை களிவண்டு காள்குழல் காதலிப்பின்
 அளியென்ற நாமங் குறிப்பாம் வெளிப்படை யாவதின்றே.

(இ - ள்.) காற்றானது குற்றம் நம்மேற் சாருமென்று எஞ்ஞான்றும் பக்கலிற் சாராது. அத்தன்மைத்தாகிய தெளிவுபொருந்திய சிறிய இடையினுக்குப் பகை செம்பொன்னாலாகிய மலையையொத்த களிப்புப் பொருந்திய தனங்களாம். வண்டினங்களே இத்தலைவி கூந்தலினை நீங்கள் விரும்பின் அளியென்ற நும்பெயர் (கற்கறித்து நன்கட்டாய் என்பதுபோல) குறிப்புப் பொருளுடையதாகும். (கிருபையையுடையதென்னும் பொருள்) வெளிப்படையா னுணர்த்தும் பொருளாவதில்லை யென்க.

(வி - ம்.) வளி - காற்று. சிகரி - மலை. அளி - கிருபையையுடையது என்னும் பொருள் வெளிப்படைப் பொருளாவதில்லை யென்க. மெய்ப்பாடு : உவகை. பயன் : சார்தல்.

(98)

கலவியின் மகிழ்தல்

அஃதாவது புணர்ச்சி யிறுதிக்கண் எங்களைப்போல இன்பமே தன் வடிவாகப் பொருந்திய கலவிக்கரணங்கள் யாவும் செயற்குத் தேவியுந் தானுமோருருவாக விருத்தலிற் பயனின்றெனக்கண்ணி இறைவன் ஈருருவாக விருந்தனனெனக் கூறாநிற்றல்.

 ஓருரு வாக விருப்பினு மென்பய னொற்றுமைகொள்
 சீருரு வாகிய செம்மலுந் தேவியுந் தானுமென
 ஈருரு வாகவும் வேறிருந் தானெம்மைப் போலவின்ப
 நீருரு வான கரணங்கள் யாவு நிகழ்த்துதற்கே.

(இ - ள்.) எம்மைப்போன்று இன்பமே தனதுருவாகக்கொண்ட கலவிக்குரிய கரணங்களெல்லாவற்றையும் செய்தின்புறும் வண்ணம் தன்னின் நீங்காதொற்றுமை கொள்ளச் சிறப்பே தனது வடிவாகக் கொண்ட தலைவன் (நாம்) ஒரே வடிவாக இருத்தலினா லென்பயன் எனக் கருதித் தேவியுந்தானும் வேறு பொருளென்று கருதும்வண்ணம் ஆண் வடிவாகவும் பெண் வடிவாகவும் வெவ்வேறு தங்கின னென்க.

(வி - ம்.) ஒற்றுமைகொள் சீருருவாகிய செம்மல் - அர்த்தநாரீச்சர வடிவம். இன்ப நீருருவான கரணம் - இன்பமே தன் வடிவமாகிய கலவித் தொழிற்குரிய செயல்கள். மெய்ப்பாடு : உவகை. பயன் : மகிழ்தல்.

(99)

நயத்தல்

அஃதாவது, கலவியின் மகிழ்ந்த தலைவன் தன்னுள்ளத்துத் தோன்றும் விருப்பினை மேன்மேல் உவகை மிகுதியான் கூறல்.

 ஆயுந் தொறுந்தொறு மின்பந் தருங்கலை யாங்கறிவு
 மாயுந் தொறுந்தொறு மின்பந் தரும்வள்ளல் வார்கழல்கள்
 தேயுந் தொறுந்தொறு மின்பந் தருஞ்சந்து தேங்குழனிற்
 றோயுந் தொறுந்தொறு நேராத வின்பஞ் சுரந்திடுமே.