| மாகிய மானை வேடருடனாடுதற் பொருட்டு அடைபவனைப்போல ஒளி பொருந்திய தினைப்புனத்தினைப் பொருந்திச் சேர்ந்தனனென்க. (வி - ம்.) சிலம்பன் - மலைவாழ்நன். குறவன். (106) | | உட்குநா ணின்றியாங் குகப்பு நோக்கியும் | | | புட்குழா மோப்பினள் புகலு மேதகு | | | பட்குலா மொழிசெவி பருகித் தேக்கியும் | | | கட்குலாங் களியனாய்ப் பரிவு காற்றினான். |
(இ - ள்.) அச்சமும், நாணமுமின்றி அப்பொழுது (அம்மையார் தனங்களின்) உயர்ச்சியைப் பார்த்ததும், புட் கூட்டங்களை யோட்டி யாவரும் விரும்பத்தக்க மேன்மை பொருந்திய பண்ணின் இசை பொருந்திய அவள் மொழியினைச் செவியாற் பருகுதல் செய்து தெவிட்டெடுத்தும் கண்ணிடத்துப் பொருந்துகின்ற களிப்பையுடையவனாய்த் தனக்குள வேட்கைத் துன்பத்தினை நீக்கினானென்க. (வி - ம்.) உட்கு - அச்சம். உகப்பு - உயர்வு. இதனை, "உகப்பே உயர்வு" என்னும் - தொல். சொல். உரியியற் சூத்திரத்தானறிக. புகற்சி - விருப்பம். பண் - இசை. கண்குலாங்களி - கண்ணிடத்துப் பொருந்துகின்ற களிப்பு. பரிவு - துன்பம். (107) | | அவ்வுழி யவ்வரை யரையன் வேட்டையான் | | | பவ்வமென் றயிர்ப்புறும் பரிச னத்தொடும் | | | செவ்விய தினைப்புனஞ் சென்று முற்றினான் | | | வெவ்வினை தீர்ப்பவன் வேங்கை யாயினான். |
(இ - ள்.) அவ்விடத்து அம்மலைக்குத் தலைவனான அரையன் வேட்டை காரணமாகக் கடலென வையங்கொள்ளும் பரிசனங்களோடு செவ்வையாகிய தினைப்புனத்தின் கண்ணே சென்று பொருந்தினான். (ஆன்மாக்களின்) கொடிய வினைகளை நீக்குபவனாகிய முருகன் வேங்கை மரமாயின னென்க. (வி - ம்.) பவ்வம் - கடல். அயிர்ப்புறல் - ஐயுறல். பரிசனம் - குற்றேவன்மக்கள். வெவ்வினை - மலங் காரணமாக வருங் கொடியவினைகள். தீர்ப்பவன் - பெயர். (108) | | உலைவறு மறைகளு மோங்கு நூல்களும் | | | கலைகளு முழுவதும் கதித்து வேர்முதல் | | | இலைமுடி வாயுரு வியைய வாங்கதன் | | | நிலைபெறு முயிரென நிமல னிற்றலும். |
(இ - ள்.) கெடுதலில்லையாகிய வேதங்களும், உயர்ந்த நூல்களும் ஏனைய கலைகள் யாவும் எழுச்சியுற்று வேர்முதல் இலை இறுதியான வடிவமாகப் பொருந்த அவ்வேங்கை மரத்தின் நிலைபெற்ற வுயிராக மல மற்றவனாகிய முருகன் நிற்கவென்க. (வி - ம்.) கதித்தல் - எழுச்சியுறல். (109) |