| | கண்டனர் கானவர் கணிமுன் னில்லது | | | வண்டுதேன் ஞிமிறுற மலர்ந்து தாதுதேன் | | | நுண்டுளி சிந்திவிண் ணோக்கி நின்றது | | | கொண்டதோர் மாயையின் கொள்கை யென்றனர். |
(இ - ள்.) கானவர்கள் முன்னில்லதாகிய வேங்கை மரத்தினைப் பார்த்து, ஆண்வண்டும் பெண்வண்டும் ஒலிக்கப் பூக்கள் மலரச்செய்து மலர்ப்பொடியும் நுண்ணிய தேன்றுளியும் சிந்தி வானை நோக்கி நின்றது. ஆதலால் இவ்வேங்கை தன்னுட்கொண்டதொரு வஞ்சகத்தின் றன்மையுடையது என்றனரென்க. (வி - ம்.) வேங்கை மலரில் வண்டுவீழ்ந்து தேனுண்ணாமை பலரும் அறிந்ததாகலின் இவ்வேங்கை மலரின் வண்டூதல்கண்டு "வண்டு தேன்ஞிமிறுற மலர்ந்து தாதுதேன் நுண்டுளி சிந்தி விண்ணோக்கி நின்றது. கொண்டதோர் மாயையின் கொள்கை" என்றார் என்க. (110) | | தீங்கிது கணிச்சியிற் றெறுமி னென்றனர் | | | ஓங்கிய பணைகளை யொழிமி னென்றனர் | | | தாங்கிய வேரொடுந் தறிமி னென்றனர் | | | வீங்கிய பராரையை வீட்டு மென்றனர். |
(இ - ள்.) இக்கணியானது தீங்கினைத் தருவதாகும். கோடரியால் வெட்டு மென்றார்கள். உயர்ந்த கிளைகளை நீக்குங்கள் என்றார்கள். கிளை முதலிய உறுப்பினைத் தாங்கியுள்ள வேரினோடு வெட்டுமினென்றார்கள். மிகப்பருத்த அடிப்பாகத்தை நீக்குங்கள் என்றார்கள். (வி - ம்.) கணிச்சி - கோடரி. பணை - கிளை. பராரை - பருத்த அடிப்பாகம். (111) | | முயற்சியின் வேடரை முதல்வன் கையமைத் | | | தியற்கைநல் லெழிலுடை யேந்து கொங்கையைக் | | | கயற்கணல் லாய்கணி காமர் நம்புனத் | | | தயற்கண்வந் தெழுந்தவா றறைதி யென்றனன். |
(இ - ள்.) இங்ஙனமாய முயற்சியினையுடைய வேடர்களை முதல்வன் தடுத்து இயல்பான வனப்பினோடு தாங்கப் பெற்ற தனங்களையுடையாளாகிய அம்மையை நோக்கிக் கயல் போலும் கண்ணையுடையாளே, இவ்வேங்கை விருப்பினைத்தருகின்ற நம்புனத்தின் பக்கலின் கண்ணே வந்து தோன்றிய வரலாற்றைச் சொல்வாயாக வென்றானென்க. (வி - ம்.) முதல்வன் - வேடர்தலைவன். ஏந்து கொங்கை : வள்ளி. கணி - வேங்கைமரம். (112) | | ஐயயா னிதன்வர லாறு தேற்றிலேன் | | | ஒய்யென நீயிரின் றுக்குன் றெய்துழி |
|