| | வெய்யதாய் விண்ணினின் றிழிந்த தாமெனப் | | | பொய்யகல் வளத்தொடும் பொலியக் கண்டனன். |
(இ - ள்.) ஐயனே இவ்வேங்கை மரத்தின் வரலாற்றினை நன்கு தெளிந்தேனில்லை. விரைவாக நீங்க ளிக் குன்றத்தினை அடைகின்ற காலத்து விருப்பத்தைத் தரத்தக்கதாய் வானினின்று இறங்கியதாகுமென்று உண்மையாகிய வளப்பத்தோடு பொலிவுறும் வண்ணங் கண்டேன் என்றாளென்க. (வி - ம்.) ஒய்யென - விரைவாக. உக்குன்று - இக்குன்று. வெய்யதாய் - விருப்பினைத் தரத்தக்கதாய். (113) | | என்னிஃ துற்றவா றென்று நாடுமுன் | | | முன்னினிர் நீயிரே முற்றி நோக்கினீர் | | | பின்னரென் னாவதோ பெரும வென்றனள் | | | அன்னவ னேவமா னறைந்த வாறென்றான். |
(இ - ள்.) இக்கணியானது பொருந்திய வண்ணம் என்ன காரணமென யான் ஆய்வதன் முன்னரே நீங்களே கருதினராகி அடைந்து பார்த்துள்ளீர்கள். பெருமையையுடையானே பின்னர் யாதாமோவென்றனள். அவ்வேடர்முதல்வன் இவ்விதம் மான்போலும் நோக்கினையுடையாள் சொல்லிய விதம் என்ன என்று ஆய்ந்தான் என்க. (வி - ம்.) ஏவம் - இவ்விதம். மான் : வள்ளி. (114) | | வரையுறை கடவுணல் லருளின் மாட்சியால் | | | திரைவள ரமிழ்தனாய் சிவணிற் றாகுமால் | | | விரைமலர்க் கணியிது வெற்பி னின்றனக் | | | குரைவளர் துணைமையி னுறுகென் றேகினான். |
(இ - ள்.) குறிஞ்சிக் கிறைவனாகிய முருகனது நல்லருளின் மாண்பால் பூமியினிடத்துப் பொருந்துகின்ற அமிழ்தினை யொத்தவளே (இவ் வேங்கை) பொருந்தியதாகும். வாசனையுடன் கூடிய மலரையுடைய வேங்கையாகிய விது வள்ளி மலையினிடத்து நினக்குப் புகழ்வளர்தற் கேதுவாகிய துணையாந்தன்மையினைப் பொருந்துவதாக வென்று கூறி நீங்கினானென்க. (வி - ம்.) சிவணுதல் - பொருந்துதல். உரை - புகழ். துணைமை - துணையாந்தன்மை. (115) | | தந்தையிவ் வாறெதிர் சாற்றி யேகலும் | | | பைந்தொடி யடுத்தனள் பணையி வர்ந்தனள் | | | கொந்தலர் குற்றனள் குழலின் வேய்ந்தனள் | | | அந்தழை வாங்கின ளல்குல் சேர்த்தினாள். |
(இ - ள்.) தந்தையாகிய வேட்டுவ அரையன் இவ்வண்ணம் இவள் முன்னரே சொல்லிச் செல்லா நிற்கப் பசிய வளையினையுடையாள் |