| (வி - ம்.) கேழ் - நிறம். அளி - வண்டு. களி - மகிழ்ச்சி. விளிவு - கேடு. மெல்குதல் - மெலிதல். (119) | | பொரவளி யசைவபோற் பூத்த சாகையங் | | | கரமல ரிளமுலை கலந்து தைவர | | | விரவிய புளகமு மகிழ்வு மேவரப் | | | பரவிய மெலிவுதீர் பரிசுங் கண்டனள். |
(இ - ள்.) காற்றானது மோத அசைவன போலப் பொலிவு பெற்ற கிளைகளாகிய கை விரிந்த இளமையாகிய தனங்களைத் தடவலால் உடன் முழுதுங் கலக்கப்பெற்ற மயிர்க்குச்சும், மகிழ்ச்சியும் பொருந்த பரந்த காமத்தானுளதாஞ் சோர்வு நீங்குந்தன்மையும் அறிந்தனளென்க. (வி - ம்.) வளிபொர வென்க. வளி - காற்று. சாகை - கிளை. தைவர - தடவ. பரிசு - தன்மை. (120) | | தனையறி யாவகை மகிழ்வு சான்றவப் | | | புனைமலர்க் கோதையாள் போந்து வேட்டைதீர் | | | வனைகழற் றாதையின் வரவு தேர்ந்தொரீஇத் | | | தினைநடு வளரிதண் சென்று வைகினாள். |
(இ - ள்.) தன்னை யறியாவண்ணம் உவகை மிகுந்த அந்தப் புனைந்த மலரையுடைய கூந்தலினையுடையாள் சென்று வேட்டத்தினின்றும் நீங்கிக் கட்டப்பெற்ற கழலினையுடைய தந்தையின் வரவைத் தெளிந்து (அக்கணியினின்றும்) நீங்கி வளர்ந்த தினைப்புனத்தின் நடுவணுள்ள பரணின் மேலேசென்று தங்கின ளென்க. (வி - ம்.) சான்ற - நிரம்பிய. வனைகழல் : வினைத்தொகை. இதண் - பரண். (121) | | கோற்றொடி தனைவிடாக் கொள்கை யாலவண் | | | வேற்றுரு வாகிய வேங்கை நாயகன் | | | வீற்றுமோர் விம்மிதம் விளைக்கத் தன்னொரு | | | கூற்றினை வேங்கையிற் குலாவ வைத்தனன். |
(இ - ள்.) திரண்ட வளையலையணிந்த அம்மையாரைவிட்டு நீங்காத கொள்கையானே அவ்விடத்து வேறோருருவங்கொண்ட கணியாகிய தலைவன் வேறும் ஒரு ஆச்சரியத்தினை உளவாக்கத் தன்னொரு பாகத்தினை அவ்வேங்கை மரத்தில் விளங்கும்வண்ணம் வைத்தன னென்க. (வி - ம்.) கோற்றொடி : அன்மொழி. வீற்று - வேறு. கூறு - பாகம். (122) | | இளையவ னெனுமுரு விகந்து வேடர்தம் | | | களைகணாங் காளையிற் காட்சி தந்தவன் |
|