பக்கம் எண் :

களவுப் படலம்977

(இ - ள்.) இடையே நெருக்குற்ற குரலானே பேசும் சொற்கள் தோன்றத் தன்பால் வந்து பொருந்துகின்ற சொற்களை ஏற்றுக் கொள்ளாத வொரு தன்மையினைக் காதுகள்காட்டச் சுடர்விடுகின்ற விபூதியானது உடலின்கண் ஒன்றினோடொன்று நெருங்காமற் பொருந்த ஒன்றினோடொன்று தொடுக்கப்பெற்ற உருத்திராக்கமாகிய பெரிய மணிகள் தோளின் கண்ணுள்ளனவாய் முன்ன ரசையாநிற்க.

(வி - ம்.) இடுகு இடைமிடைந்த - சுருங்கி இடையிடையே செறிந்த. குரல் - கண்டம். படுதல் - பொருந்துதல். விளங்குற - ஒன்றினோடொன்று நெருங்காமற் பொருந்த. தொடு - தொடுத்த : விகாரம்.

(126)

 மேதினி யளப்பவரின் மென்மெல நடந்தங்
 கூதைநனி நாசியி னுயிர்த்திடை யிடைக்கண்
 ஊதவுகு வானென வுலைந்துநிலை கொண்டே
 ஆதவன் மறைத்தகுடை யோடெதி ரடுத்தான்.

(இ - ள்.) பூமியை யளவிடுபவர்போல மெல்லமெல்ல நடந்து அப்பொழுது காற்றானது மிக மூக்கிலிருந்து உயிர்த்தல்செய்து இடையிடையே (வாயான்) ஊதலான் (கீழ்) வீழ்வான்போல வருத்தமுற்று நிற்றல்செய்து வெயிலைமறைத்த குடையினோடு எதிரேவந்து பொருந்தினா னென்க.

(வி - ம்.) ஊதை - காற்று. உயிர்த்தல் - வெளிப்படல். உகுதல் - வீழ்தல். ஆதவன் : ஆகுபெயர்.

(127)

 மன்றல்கமழ் நீறுநனி வாழியென வீந்தான்
 குன்றவர் தமக்கிறை குடங்கைகொடு பூசி
 இன்றுபய னானதின மென்றுள முவந்து
 நன்றுவர வென்னையடி கேணவிலு கென்றான்.

(இ - ள்.) மணங்கமழ்கின்ற திருநீற்றினை நீ நீண்டகாலம் வாழ்வா யாகவென வாழ்த்தித்தந்தான். மலைவாழ்நருக்குத்தலைவன் அகங்கையான் வாங்கியணிந்து இன்று யான் பயன்பெற்ற நாளென்று சொல்லி மன மகிழ்ச்சியுற்று நல்லது அடிகள் (இங்கு) வருதல் யாது காரணம் சொல்லுக வென்றனன்.

(வி - ம்.) மன்றல் - மணம். நனி - மிகுதி. குடங்கை - உள்ளங்கை. அடிகேள் : விளி.

(128)

 திரைக்குமுடன் மூப்பிது சிதைந்திளமை சேர்நும்
 வரைக்குமரி யாடவென வள்ளல்வரை யாள்வோன்
 விரைக்குமணி நீரிது விளைத்தலரி தேயென்
 றுரைக்கணயி ராதவ ணுடங்குகொடு சென்றான்.

(இ - ள்.) திரைதலைச் செய்கின்ற உடலின்கண்ணுள்ள முதுமை யானது கெட்டு இளமைப் பருவத்தைச் சேர்க்கின்ற நும்மலைக்கணுள்ள