| குமரியினிடத்து ஆடுதல் செய்ய வந்தேனென்று வள்ளற்றன்மையை யுடைய முருகன்கூற மலையை யாள்பவனாகிய வேடவரையன் வாசனை செய்கின்ற அழகிய இத்தண்ணீர் இளமையை உளவாக்கல் அருமை யாகுமேயென்று அவன் மொழியின்கண் ஐயங்கொள்ளாதவனாய் (அவனைத்) தன்னுடன் பொருந்தக் கொண்டுசென்றன னென்க. (வி - ம்.) வரைக்குமரி - வரைக்கண்ணுள்ள குமரிதீர்த்தம் எனவும் வரையின்கண்ணுள்ள குமரியாகிய வள்ளிநாயகியார் எனவும் சிலேடைப் பொருள். ஆடுதல் - மூழ்கல், கூடல் எனவும் பொருள்படும். அயிர்தல் - ஐயங்கோடல். (129) | | முதுக்குறைவு போலுடலின் மூப்புமுதிர் தூயோய் | | | புதுக்கணியி னீயும்விளை பூம்புனமி ருந்து | | | மதுக்குவளை வாய்விரி வரைக்குமரி யாடிப் | | | பதுக்கைவரை யாருணவு பண்பினுகர் கென்றான். |
(இ - ள்.) பேரறிவு முதிர்ந்திருத்தல்போல உடலின்கண் முதுமை முதிர்ந்த தூயோனே புதிதாகிய இக்கணியும் நீயும் இப்பொலிவுபெற்ற புனத்தின்கண்ணிருந்து தேனுடன்கூடிய குவளை மலர்கள் தன்பால் மலர்கின்ற வரையின்கண்ணுள்ள குமரியென்னும் பெயரையுடைய நீரின்கண் மூழ்கிப் பாறையினையுடைய மலைவாழ்நருக்குரிய (தேன், கிழங்கு முதலிய) உணவுகளைப் பண்புடனே உண்ணுக வென்றா னென்க. (வி - ம்.) முதுக்குறைவு - பேரறிவு. குமரி - குமரிதீர்த்தம், வள்ளியம்மையார். ஆடல் - மூழ்கல், கூடல். (130) | | மங்கையிவர் நங்குமரி வார்சுனையி னாட | | | இங்கணவி னாரிவர்த மக்கினிய நல்கித் | | | தங்குகென வொண்கனி தயங்குமது மற்றும் | | | அங்கணுத விக்கடித கன்றுமனை புக்கான். |
(இ - ள்.) மங்கைப் பருவமுடைய வள்ளியே ! இப்பெரியார் நமது குமரியென்னும் நீரையுடைய சுனையின்கண் மூழ்க இங்குப் பொருந்தினார். இப்பெரியாருக்கு (அவர் விரும்பிய) இனியபொருள்களைத் தந்து தங்குவாயாக வென்றுசொல்லி ஒளிபொருந்திய கனிகளும் விளங்குகின்ற தேன் ஏனைய உணவுப்பொருள்களும் தந்து விரைவாக (அங்கணின்றும்) நீங்கி வீட்டினையடைந்தா னென்க. (வி - ம்.) மங்கை - அண்மைவிளி. தங்குகென - விகாரம். அணவினார் - அடைந்தனர். (131) | | பட்டிமை விருத்தனணு கப்பயிற லுற்றுக் | | | கட்டழகு கண்ணிணை கவர்ந்துகளி கொள்ள | | | எட்டனை யுறுப்புமொழி யாதெளிது நோக்கி | | | மட்டுவிரி கூந்தலுரை யாடமகிழ் கூர்ந்தான். |
|